சென்னை : கொரோனாவால் கொந்தளித்த இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி செய்துள்ள ட்வீட் ஒன்று, அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளராக இருந்து, நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனியின் பாடல்களுக்கு என்றே, பிரத்யேக ரசிகர்கள் கூட்டம் ஒன்று உள்ளது. புரியாத வார்த்தைகளை பயன்படுத்தி, பாடல்கள் அமைப்பதில் விஜய் ஆண்டனி வல்லவர்.
ஆரம்ப காலத்தில், விஜய் ஆண்டனி இசை அமைத்திருந்த பாடல்கள், இன்றளவிலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகிறது.
அஜித் ரசிகர்களால் இந்த நாளை மறக்க முடியுமா? இயக்குனர் சிறுத்தை சிவா போட்ட வைரல் ட்வீட்!
நடிகராக மாறிய விஜய் ஆண்டனி
இசையில் புதிய ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட விஜய் ஆண்டனி, 'நான்' திரைப்படம் மூலம் நடிகராக மாறினார். தொடர்ந்து, 'சலீம்', 'இந்தியா பாகிஸ்தான்', 'பிச்சைக்காரன்' உள்ளிட்ட பல திரைப்படைங்களில் அவர் நடித்திருந்தார். கடைசியாக, கோடியில் ஒருவன் திரைப்படம் வெளியாகியிருந்தது. தொடர்ந்து, பல திரைப்படங்களில் அவர் நடித்தும் வருகிறார்.
பாடு படுத்தும் கொரோனா
இந்நிலையில் தான், விஜய் ஆண்டனி தற்போது செய்துள்ள ட்வீட் ஒன்று, அதிகம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு, சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், அனைத்து உலக நாடுகளையும் கடுமையாக அச்சுறுத்தியிருந்தது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகியும், இன்னும் கொரோனா தொற்றின் தீவிரம் குறைந்த பாடில்லை. நடுவில், சில மாதங்கள் இந்த தொற்றின் சீற்றம் குறைவாக இருந்தாலும், இரண்டாம் அலை, மூன்றாம் அலை என தொடர்ந்து மக்களை ஒரு பாடு படுத்தி தான் வருகிறது.
சாய்னா நேவாலை பாலியல் ரீதியாக திட்டிய நடிகர் சித்தார்த்? வலுக்கும் கண்டனங்கள்...
ஏழைகள் பாதிப்பு
தற்போது, ஒமைக்ரான் என்னும் தொற்றும், பல உலக நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படி கொரோனா தொற்றின் தொடர் அச்சுறுத்தல்கள் காரணமாக, நடுத்தர மக்கள் பலர், வேலையை இழந்து, தங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவே தடுமாறி வருகின்றனர். ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பும் நேரத்தில், மீண்டும் தொற்றின் தீவிரம் அதிகரிப்பதால், நடுத்தர மக்களும், தினசரி கூலித் தொழில் மற்றும் சிறு சிறு வியாபாரம் செய்பவர்களும், எந்த வித முன்னேற்றமும் இல்லாமல், கடும் அவதிக்குள்ள ஆகி வருகின்றனர்.
மீளாத சூழ்நிலை
முதல் அலையின் போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வேலை இல்லாமல், தங்களின் சொந்த மாநிலத்திற்கு பல்லாயிரம் கிலோ மீட்டர் நடந்தே செய்யற துயர சம்பவமும் அரங்கேறியிருந்தது. அதே வேளையில், பெரிய பெரிய முதலாளிகள் மற்றும் தொழிலதிபர்கள், கொரோனா தொற்றினால், ஓரளவுக்கு பாதிப்பு அடைந்தாலும், மீண்டும் தங்களின் தொழிலை அதிகம் அதிகம் மேம்படுத்தி, பழைய நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
பாம் போட்டு அழிச்சுடனும்
இதனை எல்லாம் குறிப்பிட்டு ட்வீட் செய்த விஜய் ஆண்டனி, 'கொரோனா பணக்காரனை பெரிய பணக்கரானாகவும், ஏழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும். எவனாவது ஹிரோஷிமா நாகசாகில பாம் போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும்! வாழ்க வளமுடன்!' என குறிப்பிட்டுள்ளார்.
அதிக கோபத்துடன் விஜய் ஆண்டனி ட்வீட் செய்தது போல தோன்றும் நிலையில், நெட்டிசன்கள் மத்தியில் இந்த கருத்து, அதிகம் வைரலாகி வருகிறது.
கொரோனா👽பணக்காரனை பெரிய பணக்காரனாகவும்,
எழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும்👹
எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி,
உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும்🔥
வாழ்க வளமுடன்
— vijayantony (@vijayantony) January 10, 2022