www.garudavega.com

"வெற்றிமாறன், வெங்கட் பிரபு, பா. ரஞ்சித்".. VIJAY ANTONY படத்திற்காக.. ஒன்றிணைந்த இயக்குனர்கள்.. VIRAL TEASER!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர் இயக்குனர் CS அமுதன்.

vijay antony and cs amudhan raththam teaser released

தமிழில் Spoof படங்கள் இயக்கி அதிகம் பெயர் எடுத்த CS அமுதன், தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் 'ரத்தம்' என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இசை அமைப்பாளராக பட்டையை கிளப்பிக் கொண்டிருந்த விஜய் ஆண்டனி, நான் என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகனாகவும் அறிமுகமாகி இருந்தார். நடிகராகவும் சிறந்த பெயர் எடுத்த விஜய் ஆண்டனி, சலீம், பிச்சைக்காரன், கோடியில் ஒருவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக ரத்தம், அக்னிச் சிறகுகள், பிச்சைக்காரன் 2, கொலை உள்ளிட்ட பல  திரைப்படங்களும் தயாராகி வருகிறது. இதில், கொலைகாரன் 2 படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், ரத்தம் படத்தின் மூலம் இயக்குனர் CS அமுதனுடன் இணைந்துள்ள விஜய் ஆண்டனி, அதன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

vijay antony and cs amudhan raththam teaser released

ரத்தம் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமில்லாமல், முன்னணி இயக்குனர்களான வெற்றிமாறன், வெங்கட் பிரபு மற்றும் பா. ரஞ்சித் உள்ளிட்டோரும் இந்த டீசரில் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளது குறித்து சில ப்ரோமோவும் வெளியாகி இருந்தது.

vijay antony and cs amudhan raththam teaser released

இந்த நிலையில், தற்போது ரத்தம் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. CS அமுதன் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளியான காமெடி படங்கள் போல இல்லாமல், சஸ்பென்ஸ் திரில்லர் படமாக ரத்தம் இருக்கும் என்பது டீசர் மூலம் தெரிகிறது. அதே போல இயக்குனர்கள் வெற்றிமாறன், வெங்கட் பிரபு மற்றும் பா. ரஞ்சித் ஆகியோர் டீசர் காட்சிகளில் தோன்றுவதுடன் அவர்கள் பேசும் வசனமும் பின்னணியில் வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay antony and cs amudhan raththam teaser released

People looking for online information on CS Amudhan, Pa Ranjith, Raththam, Venkat Prabhu, Vetrimaaran, Vijay Antony will find this news story useful.