தளபதி விஜய் - விஜய் சேதுபதி இணையும் தளபதி 64 படத்தில் இருந்து முக்கிய அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் , நயன்தாரா இணைந்து நடித்து கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் 'பிகில்'. அட்லி இயக்கியுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்திருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Vijay and Vijay Sethupathi's Thalapathy 64 Delhi Schedule starts tomorrow

இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். பெண்கள் ஃபுட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்துக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்து வருகின்றனர்.

இதனையடுத்து தளபதி விஜய் 'மாநகரம்', 'கைதி' படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, 96 படத்தில் நடித்த கௌரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

இந்த படத்துக்கு அனிருத் இசைமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நாளை முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக தளபதி விஜய் விமானம் மூலம் டெல்லி செல்கிறார். விமான நிலையத்தில் அவர் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Vijay and Vijay Sethupathi's Thalapathy 64 Delhi Schedule starts tomorrow

People looking for online information on Anirudh Ravichander, Lokesh Kanagaraj, Vijay, Vijay Sethupathi will find this news story useful.