www.garudavega.com

நயன்தாராவை எப்ப 'மேரேஜ்' பண்ணுவீங்க?.. "ரொம்ப செலவாகும் ப்ரோ..".. மனம் திறந்த 'விக்னேஷ் சிவன்'!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் விக்னேஷ் சிவன், தமிழ் ரசிகர்களிடையே தமது வித்தியாசமான திரைப்படங்களால் நன்மதிப்பையும் வரவேற்பையும் பெற்றவர். 

vignesh shivan viral answer to fan about marrying nayanthara

நடிகை நயன்தாராவுடன் இணைந்து, பல நல்ல திரைப்படங்களை தயாரிக்கத் தொடங்கியிருக்கும் விக்னேஷ் சிவனை, பலரும் இந்த நல்ல முன்னெடுப்புக்காக பாராட்டியும் வருகின்றனர். அப்படித்தான் அண்மையில், பல சர்வதேச திரைப்பட விழாக்களில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து தயாரித்த 'கூழாங்கல்' திரைப்படம் கவனம் பெற்றுள்ளது. 

vignesh shivan viral answer to fan about marrying nayanthara

இதனிடையே நயன்தாரா நடித்திருக்கும் 'நெற்றிக்கண்' திரைப்படம், பிரபல ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தில் சமந்தாவும் கைகோர்த்துள்ளார்.   

vignesh shivan viral answer to fan about marrying nayanthara

இந்நிலையில் ரசிகர்களுடனான இன்ஸ்டாகிராம் கேள்வி பதில் அமர்வினை தொடங்கிய விக்னேஷ் சிவன், அதில், “நயன்தாரா மேடமை ஏன் கல்யாணம் பண்ணவில்லை? - மிகவும் காத்திருக்கிறோம்.” என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு பதில் அளித்துள்ளார். தமது அந்த பதிலில், “திருமணத்துக்கெல்லாம் ரொம்ப செலவு ஆகும் ப்ரோ.. எனவே திருமணத்துக்காக பணம் சேர்க்கிறோம். கொரோனா ஒழிய காத்திருக்கிறோம்” என விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ: "நயன்தாராவும் நீங்களும் இருக்கும் சீக்ரெட் ஃபோட்டோ?!".. ரசிகருக்காக இன்ஸ்டாவில் பகிர்ந்த விக்னேஷ் சிவன்!

நயன்தாராவை எப்ப 'மேரேஜ்' பண்ணுவீங்க?.. "ரொம்ப செலவாகும் ப்ரோ..".. மனம் திறந்த 'விக்னேஷ் சிவன்'! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh shivan viral answer to fan about marrying nayanthara

People looking for online information on Nayanthara, Vignesh shivan will find this news story useful.