www.garudavega.com

"யாருய்யா நீங்க".. விக்னேஷ் சிவன் TWITTER பக்கத்தில் நடந்த சம்பவம்.. கடுப்பாகி போட்ட பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'போடா போடி' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.

Vignesh Shivan Twitter account was hacked by hackers

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "நாம சாதிச்சுட்டோம்".. ஆஸ்கர் விருதுடன் ஜூனியர் NTR.. உருக்கமான பதிவு..!  

அவர் கடைசியாக இயக்கியிருந்த "காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படம், கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகி  இருந்தது. இதில், நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியிலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்தாண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

Vignesh Shivan Twitter account was hacked by hackers

Images are subject to © copyright to their respective owners.

இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

சில மாதங்களுக்கு முன்  இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என அறிவித்து குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

Vignesh Shivan Twitter account was hacked by hackers

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்தில் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு  கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உருக்கமான கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.

Vignesh Shivan Twitter account was hacked by hackers

Images are subject to © copyright to their respective owners.

அந்த பதிவில் "என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி!.. வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது, பாராட்டும், வெற்றியும் நமக்குக் கற்பிப்பதை விட, அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது!" என குறிப்பிட்ட விக்னேஷ் சிவன், #Wikki6 என தனது அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கி உள்ளது பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

Vignesh Shivan Twitter account was hacked by hackers

Images are subject to © copyright to their respective owners.

இச்சூழலில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் டிவிட்டர் பக்கம் Circle என்ற ஹேக்கர்கள் மூலம் முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன்,  "யாருய்யா அந்த சர்க்கிள். என்னுடைய டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இது எனக்கு எரிச்சலையும் பயத்தையும் கொடுத்துள்ளது" என விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

Also Read | THE ELEPHANT WHISPERERS : ஆஸ்கர் வென்ற இந்திய பெண்கள்.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி போஸ்ட்.. !

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Twitter account was hacked by hackers

People looking for online information on Vignesh shivan, Vignesh Shivan Twitter account will find this news story useful.