இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் ஒருநாள் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என அறிவித்து குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அதில், "ஐ லவ் யூ டூ & ஐ லவ் யூ த்ரி" என பதிவிட்டிருந்தார். மேலும் குழந்தைகளின் புகைப்படங்களுடன் நயன்தாராவின் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.
ICMR வழிமுறைப்படி தான் அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட இத்தம்பதியை பலரும் வாழ்த்தினர். இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் தமது திரைப்பட பணியை கவனிக்கத் தொடங்கினார். இதேபோல் நயன்தாரா நடிப்பில் கனெக்ட் திரைப்படம் கடைசியாக வெளியானது. இந்நிலையில்தான், அண்மையில் நடைபெற்ற பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு ஐகான்ஸ் விருது நிகழ்வில் நடிகை நயன்தாரா தங்களுடைய குழந்தைகளின் பெயர்களை அறிவித்தார்.
இதை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தங்களது குழந்தைகளுக்கு வைத்த பெயர்களை ட்விட்டரில் பதிவிட்டார். அதன்படி, அந்த பதிவில், “எங்களது வரமாய் வந்த குழந்தைகளுக்கு முறையே உயிர் ருத்ரோநீல் N ஷிவன் மற்றும் உலக் தெய்விக் N ஷிவன் என்றும் பெயரிட்டுள்ளோம். இங்கு N என்பது, உலகின் தலைசிறந்த இவர்களின் தாய், வாழ்வில் மகிழ்ச்சியும் பெருமையும் மிக்க தருணம்” என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குழந்தைகளின் பெயர்களுக்கான அர்த்தமும் தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி இவற்றுள் உயிர் மற்றும் உலக் ஆகிய பெயர்களின் அர்த்தங்களாய் முறையே உயிர் மற்றும் உலகம் என புரிந்துகொள்ள முடியும். குறிப்பாக ருத்ரோநீல் என்றால் சிவனை குறிக்கும் ஒரு பெயராகவும், தெய்விக் என்பது தெய்வீகமான என்கிற அர்த்தம் பொருள்படுவதாகவும் குறிப்பிட்டு இந்த பெயர்கள் பேசுபொருளாகி வருகின்றன.