சிவகார்த்திகேயனுடன் இணைந்து நயன்தாரா நடித்த 'மிஸ்டர் லோக்கல்' சமீபத்தில் வெளியாகியிருந்தது. ஸ்டுடியோ கிரீன் தயாரித்த இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்தார். ராஜேஷ்.எம் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
இதனையடுத்து 'உன்னைப் போல் ஒருவன்', 'பில்லா 2' படங்களின் இயக்குநர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் 'கொலையுதிர் காலம்' படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். இந்த படத்துக்கு தணிக்கை குழுவினர் யு\ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
எக்ஸ்ட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கோரி கெர்யக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமேஸ்வர் எஸ்.பகத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்த படம் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'இந்த படம் உலகெங்கிலும் வெளியாவதற்கு வாழ்த்துகள்' என்று தெரிவித்தார். மேலும், 'இந்த படத்தை பார்த்தேன். நல்ல திரில்லர் திரைப்படமான இதனை பார்வையாளர்கள் ரசிப்பார்கள். திரில்லர் படங்களின் வரிசையில் இந்த படமும் கவனம் பெறும் . நயன்தாரா உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். சக்ரி தலைமையிலான குழுவினர் தொழில்நுட்ப ரீதியாக தரமான படத்தை கொண்டுவந்திருக்கிறார்கள்.
தயாரிப்பாளர் தனது தயாரிப்பு மீது நல்ல கவனமும் அக்கறையும் கொண்டுள்ளார். தனிப்பட்ட முறையில் நமக்குள் கசப்பான தருணங்கள் இருந்தாலும் முடிவில் நல்ல பேச்சுவார்த்தையினால் எல்லாம் சுமுகமாக முடிந்தது. நாம் எல்லாரும் ஒரே துறையில் பணிபுரிகிறோம். நல்ல மற்றும் எண்ணங்கள் நம்மை சுற்றிலும் இருக்கின்றன. கொலையுதிர்காலம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற எனது வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.