www.garudavega.com

"பெற்றோர் மீது பேரன்பு கொண்டவர் AK".. அஜித் தந்தையின் மறைவுக்கு விக்னேஷ் சிவன் இரங்கல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார் தந்தை சுப்ரமணியமின் மறைவுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Vignesh Shivan Condolences to Ajith Kumar Father Demise

Also Read | அஜித் தந்தை மறைவு.. இறுதி அஞ்சலி செலுத்திய A.R. முருகதாஸ், மகிழ் திருமேனி, AL விஜய்! வீடியோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது.

துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் தியேட்டரை தொடர்ந்து ஓடிடி தளத்திலும் துணிவு படம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

Vignesh Shivan Condolences to Ajith Kumar Father Demise

நடிகர் அஜித்குமார் அடுத்ததாக லைக்கா நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை சென்னையில் நடிகர் அஜித் குமார் இல்லத்தில்  காலமானார். அவருடைய மறைவுக்கு தமிழக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், சசிகலா, விஜயபாஸ்கர், விஜய் வசந்த், நடிகர் ஜி எம் சுந்தர், நடிகை சாக்ஷி அகர்வால், நடிகர் சிவா ஆகியோர் அறிக்கை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளனர்.  

Vignesh Shivan Condolences to Ajith Kumar Father Demise

அஜித்குமார் தந்தையார் பி.எஸ்.மணியின் இறுதி சடங்கு பெசண்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற்றது.

இறுதிச் சடங்கில் நடிகர் அஜித் குமார், நடிகை ஷாலினி அஜித்குமார், நடிகர் ரிச்சர்ட் ரிஷி, நடிகர் சிவா உள்ளிட்ட அஜித்குமாரின் உறவினர்கள் கலந்து கொண்டனர். மேலும் சுரேஷ் சந்திரா, அனு வர்தன், மருத்துவர் விஜய் ஷங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Vignesh Shivan Condolences to Ajith Kumar Father Demise

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "சுப்ரமணி சார் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்! அஜித் சார் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.. : (அஜித் சார் எப்பொழுதும் அவரது தந்தையை கவனித்துக் கொள்ளும் விதம் பெற்றோர்கள் மீது அவர் கொண்டிருந்த அன்பை காட்டுகிறது! இந்த தாங்க முடியாத இழப்பை, குடும்பத்திற்குள் சமாளிப்பதற்கு கடவுள் எல்லா சக்தியையும் அமைதியையும் அஜித் சார்க்கு கொடுக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்!" என விக்னேஷ் சிவன்  இரங்கல் தெரிவித்துள்ளார்.

Also Read | "சுப்ரமணியம் Uncle போல அக்கறையான ஒருவரை".. அஜித் தந்தை குறித்து சியான் விக்ரம் உருக்கம்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Condolences to Ajith Kumar Father Demise

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar Father Demise, Father Subramaniam Demise, Vignesh shivan will find this news story useful.