RRR Others USA
www.garudavega.com

“கடவுள்கிட்ட இததான் கேக்குறோம்”… நயன்தாரா அப்பா குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் பெற்றோரோடு இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர அது கவனத்தைப் பெற்றுள்ளது.

Vignesh shivan birthday wish to nayanthara father viral post

Dowry பற்றி கல்லூரி புத்தகத்தில் வந்த விஷயம்?.. "அடேங்கப்பா.." விளாசித் தள்ளிய Vignesh Shivan.. வைரல் பதிவு

அறிமுகம் to லேடி சூப்பர் ஸ்டார்..

ஐயா படம் மூலம் தனது கோலிவுட் அறிமுகத்தைத் தொடங்கிய நயன்தாரா அடுத்த சில ஆண்டுகளுக்குள்ளாகவே ரஜினியின் சந்திரமுகி படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகையானார். அதன் பின்னர் பில்லா, யாரடி நீ மோகினி, வில்லு, வல்லவன் மற்றும் கஜினி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகிய அவருக்கு ரி எண்ட்ரி படமாக ராஜாராணி படம் அமைந்தது. அதன் பின்னர் வரிசையாக ஆரம்பம், அறம், விஸ்வாசம் படங்களில் அவர் தனது சிறந்த நடிப்புத் திறமையால் ரசிகர்களின் இதயங்களை வென்றதால் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டு வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்றது.

விக்னேஷ் சிவனோடு காதல்….

நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதையடுத்து இருவரும் காதலர்களாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இப்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனம் மூலமாக ராக்கி படத்தை வெளியிட்டுள்ளனர். அதுபோலவே கூழாங்கல் என்ற சர்வதேச விருதுகளைக் குவிக்கும் படத்தையும் வெளியிட உள்ளனர்.

Vignesh shivan birthday wish to nayanthara father viral post

விக்னேஷ் சிவனின் நெகிழ்ச்சிப் புகைப்படம்…

அடிக்கடி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் நயன்தாராவோடு இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் தற்போது நயன்தாராவின் பெற்றோரோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நயன்தாராவின் தந்தை குரியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில் ‘ இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அச்சன்(குரியன்). நீங்கள் இப்படி சிரிப்பதும், உணவு உண்பதும், எங்களைப் பார்ப்பதும் எங்களுக்கு மகிழ்ச்சி. நீங்கள் எங்களோடு இருப்பது எங்கள் வாழ்க்கையை அழகாக்குகிறது. கடவுள் இப்படியே என்றென்றும் எங்களோடு நீங்கள் இருக்க ஆற்றலையும் சக்தியையும் உங்களுக்குக் கொடுக்கட்டும். லவ் யு அச்சூ… நீங்கள் எங்களுக்குக் கிடைத்த வரம்’ எனக் கூறியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

Vignesh shivan birthday wish to nayanthara father viral post

நயன்தாராவின் தந்தை குரியன் சமீபத்தில் உடல் நலக்கோளாறுகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதை நயன்தாரா சமீபத்தில் வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போடு..'பீஸ்ட்' படத்தின் இந்தி உரிமம்.. கைப்பற்றிய 'அண்ணாத்த' பட வினியோகஸ்தர்..! செம சம்பவம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh shivan birthday wish to nayanthara father viral post

People looking for online information on Nayanthara, Vignesh shivan, Vignesh shivan birthday wish to nayanthara father will find this news story useful.