சென்னை அருகே மகாபலிபுரம், பூந்தேரியில் வைத்து தற்போது 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
Also Read | தனுஷ் நடிக்கும் 'ஆயிரத்தில் ஒருவன்-2'.. செல்வராகவன் கொடுத்த சூப்பர் அப்டேட்!
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து சுமார் 2,000 வீரர்கள், வீராங்கனைகள் வரை பங்கேற்று போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.
மேலும், செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்காக மிக பிரம்மாண்டமான அளவில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.
44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு முன்பாக, சென்னை நேரு அரங்கில் வைத்து தொடக்க விழாவும் நடைபெற்றிருந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் முக ஸ்டாலின், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் ஆல்பம் பாடல் ஒன்றை விக்னேஷ் சிவன் இயக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேலும், இதன் வீடியோவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஏ.ஆர். ரஹ்மான் தோன்றி இருந்தனர்.
அதே போல, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவையும் விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். பல பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகள், தமிழ் பாரம்பரியத்தை பறை சாற்றும் நிகழ்ச்சிகள் என பல விஷயங்கள், சர்வதேச அளவில், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை திரும்பி பார்க்க வைத்திருந்தது. அதே போல, கமல்ஹாசனின் பின்னணி குரலில் தமிழ்நாட்டின் கலாசார வளர்ச்சி பற்றியும் நிகழ்த்துக் கலை நடைபெற்றிருந்தது.
இதில், 1200 ஆண்டுகளுக்கு முன் மயிலாடும்பாறையில், தமிழர் கலை, கலாச்சாரம் செழித்து இருந்ததற்கான சான்று, முதல் நூற்றாண்டில் கரிகால சோழன் கல்லணை காட்டியது தொடர்பான முப்பரிமாணத்துடன் கமல் குரலில் விளக்கமப்பட்டிருந்தது நிகழ்வின் சிறப்பம்சமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்காக நடிகர் கமல்ஹாசனுடன் தனது குழுவினர் கலந்துரையாடியது தொடர்பான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.
அதில், "உலக நாயகன் கமல்ஹாசனுடன் சில மணி நேரங்கள் செலவழிக்க நேரம் கிடைத்ததை எண்ணி நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய அறிவு, அவர் அளித்த விளக்கங்கள் மற்றும் அவர் எங்களுக்கு கூறிய நுணுக்கங்கள் உள்ளிட்டவை, எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அவரது குரல் இதில் அனைத்து மாற்றங்களையும் ஏற்படுத்தி இருந்தது. நன்றி கமல் சார்" என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
Also Read | Angamaly Diaries நடிகர் மர்மமான முறையில் மரணம்?.. வீட்டில் இருந்து மீட்கப்பட்ட 'உடல்'.. அதிர்ச்சி பின்னணி