www.garudavega.com

AR ரஹ்மான் இயக்கிய படம்.. "நானும், நயனும் இந்த படம் பாத்துட்டு".. விக்னேஷ் சிவன் வைரல் ட்வீட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய அளவில் மட்டுமில்லாமல், இசை அமைப்பாளராக சர்வதேச அரங்கிலும் அதிக கவனம் ஈர்த்து வருபவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்.

Vignesh shivan about ar rahman le musk movie experience

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில், அரவிந்த் சாமி மற்றும் மதுபாலா நடிப்பில் வெளியாகி இருந்த 'ரோஜா' திரைப்படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஏ.ஆர். ரஹ்மான். முதல் படத்திலேயே சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான், அதன் பிறகு தொட்டது எல்லாம் தூள் என்ற கணக்கில் தான் சென்று கொண்டிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்து வேகமாக நகர்ந்து சென்ற ஏ.ஆர். ரஹ்மான், ஹாலிவுட் வரைக்கும் சென்று ஆஸ்கர் விருதினையும் வென்றதுடன் இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருந்தார்.

இசை அமைப்பாளராக அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆன போதும் தொடர்ந்து தனது இசையால் ரசிகர்களை கட்டி போட்டும் வருகிறார். சமீபத்தில் கூட இரவின் நிழல், பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு என ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி இருந்த படங்களின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது.

Vignesh shivan about ar rahman le musk movie experience

இசை அமைப்பாளர் என்பதையும் தாண்டி, '99 சாங்ஸ்' என்னும் திரைப்படம் மூலம் எழுத்தாளராகவும் அறிமுகமாகி இருந்தார் ஏ.ஆர். ரஹ்மான். கடந்த 2019 ஆம் ஆண்டு, இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. மேலும், 99 சாங்ஸ் படத்திற்கு, இசையமைத்து தயாரிக்கவும் செய்திருந்தார் ஏ.ஆர். ரஹ்மான்.

இதனைத் தொடர்ந்து, இசை, கதை என்பதைத் தாண்டி, இயக்குனர் அவதாரத்தையும் எடுத்திருந்தார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். 'லி மஸ்க்' (Le Musk) என்னும் 36 நிமிடம் ஓடக் கூடிய திரைப்படம் ஒன்றை ரஹ்மான் இயக்கி உள்ளார். தனது மனைவியின் ஒன் லைனில் இருந்து ரஹ்மான் இந்த ஐடியாவை உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது.

Vignesh shivan about ar rahman le musk movie experience

விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில், லி மஸ்க் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், நோரா அரனிசாண்டர், கை பர்னெட் ஆகியோர் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்ட நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், லி மஸ்க் படம் குறித்து விக்னேஷ் சிவன் பகிர்ந்த ட்வீட், அதிக கவனம் பெற்று வருகிறது.

Vignesh shivan about ar rahman le musk movie experience

Jimmy Nguyen என்ற நபர், லி மஸ்க்கை பார்த்து விட்டு, இந்த VR அனுபவத்தால் மெய்சிலிர்த்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். மேலும், ஏ.ஆர். ரஹ்மானின் சிந்தனையையும் பாராட்டி கருத்து தெரிவித்திருந்தார்.

Vignesh shivan about ar rahman le musk movie experience

அப்படி ஒரு சூழலில், இது தொடர்பான ட்வீட்டை பகிர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன், "இது ஒரு அற்புதமான அனுபவம்!!, என்ன ஒரு தொலைநோக்கு பார்வை @arrahman சார். அனைத்து வகையான கலையிலும் மாஸ்டர் (ஏ.ஆர். ரஹ்மான்) உருவாக்கும் இது போன்ற இன்னும் அற்புதமான அனுபவங்களை காண ஆவலுடன் காத்திருக்கிறோம் ❤️😇😍. துபாயில் இதனைக் காணும் வாய்ப்பு கிடைத்தது ❤️😇😍 . நானும், நயனும் இந்த அனுபவத்தால் வியந்தோம் 🤩" என மெய்சிலிர்க்கும் வகையிலான கருத்துக்களை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh shivan about ar rahman le musk movie experience

People looking for online information on AR Rahman, Le Musk, Vignesh shivan will find this news story useful.