கடைசியாக அஜித் நடிப்பில் வலிமை படம் கடந்த பிப்ரவரி மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியானது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது வலிமை படம். இந்த படம் மே 1, நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஜி தமிழ் தொலைக்காட்சியில் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்கி உள்ளது. AK61 படத்தின் படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் துவங்கி உள்ளது என்று நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.
போனிகபூர் Behindwoods சேனலுக்கு அளித்த பேட்டியில், AK61 நெகட்டிவ் ரோல் பற்றிய கேள்விக்கு. ரசிகர்களாக முடிவு செய்ததாகவும், AK61 படம் Adventure ஆகவும், ரசிகர்களை ஆர்வத்தை கிளப்பும் விதமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். AK 61 படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார்.
61க்கு பின் நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரவேற்பை பெற்றது. அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீசை ஒட்டி நேற்று இரவு நடந்த மூன்று மணி நேர டிவிட்டர் ஸ்பேஸில் இயக்குனர் விக்னேஷ் சிவன் AK62 படம் பற்றிய பிரத்யேக தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், AK61 படத்தின் திரைக்கதைக்காக மட்டும் இரண்டரை வருடங்கள் முதல் 3 வருடம் வரை உழைத்துள்ளதாக கூறியுள்ளார்.
முதல்முறையாக AK62 பட அறிவிப்புக்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் படம் பற்றி பொது தளத்தில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.
https://www.behindwoods.com/bgm8/