www.garudavega.com

“சூரி நடிச்சதுலயே இந்த படம்..” - ‘விடுதலை தமிழரசி’ பவானி ஸ்ரீ புகழாரம் - EXCLUSIVE பேட்டி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகியுள்ளது.

Viduthalai Bhavani Sre about Soori Exclusive Interview

விடுதலை படத்தில் நடிகர்கள் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். தங்கம் எழுதிய வேங்கச்சாமி திரைக்கதையை மூலக்கதையாகக் கொண்டும்,  ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாக்  கொண்டும் இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளது.

பீரியட் டிராமா திரைப்படமான இப்படத்தில் புதிதாக காவல்துறையில் டிரைவராக சேரும் குமரேசன்(சூரி) அங்கு காவல்துறையினரால் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வரும் மக்கள் படை தலைவர் பெருமாள் என்கிற வாத்தியார் (விஜய் சேதுபதி) பிடிபட எவ்வாறு காரணமாகிறார்? இதில் மக்கள் காவல்துறையினரை நம்புகின்றனரா அல்லது மக்கள் படை தலைவர் பக்கம் நிற்கின்றனரா? இதன் பிரச்சனை தொடங்கும் மையம் எது ? இதற்குள் நடக்கும் அரசியல் பின்னணி என்னென்ன? என்று பல கோணங்களில் உருவாகி இருக்கிறது விடுதலை திரைப்படம்.

இந்நிலையில் இப்படத்தின் நாயகி பவானி ஸ்ரீ இப்படத்தில் தன்னுடன் நடித்த நாயகன் சூரி குறித்து பேசும்போது, “முதல் நாளில் இருந்தே அவரை குமரேசனாக பார்க்க முடிந்தது. இதுவரை சூரி நடிச்சதிலேயே இது மிகவும் வித்தியாசமான கேரக்டர் மற்றும் பெர்ஃபார்மென்ஸ்.  உடல் ரீதியாக சில கஷ்டமான காட்சிகள் வரும்போது, ஒரு பக்கம் பயந்து யோசிப்பார். அதே சமயம் அதை நடிக்கும்போது அதற்கு நியாயம் செய்யும் வகையில் நடிப்பார். தான் நடிக்கும் கதாபாத்திரத்துக்கான மெனக்கெடலை செய்யவும், கடின உழைப்பை கொண்டுவரவும், அவர் எந்த எல்லைக்கும் செல்வார்.” என குறிப்பிட்டார்.

“சூரி நடிச்சதுலயே இந்த படம்..” - ‘விடுதலை தமிழரசி’ பவானி ஸ்ரீ புகழாரம் - EXCLUSIVE பேட்டி வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Viduthalai Bhavani Sre about Soori Exclusive Interview

People looking for online information on Bhavani Sre, Viduthalai will find this news story useful.