விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் படத்தின் ஆரம்ப பட்ஜெட் குறித்து பேசியுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "8 நாள் கால்சீட்னு சொல்லி கூப்பிட்டு போய் 65 நாள்.." வெற்றிமாறன் குறித்து பேசிய விஜய் சேதுபதி!
ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது.
விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்த விடுதலை படத்தில் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். மேலும் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையில் தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.
தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விடுதலை முதல் பாகத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். படத்தின் டிரெய்லரும் அப்போது வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், "தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு நன்றி. 4 கோடி ரூபாய் செலவில் விடுதலை படத்தை எடுப்பதாக சொன்னேன்.
முதல் கட்ட படப்பிடிப்பு முடியும் போதே 12 நாளில் 4 கோடி ரூபாய் மேல் போய் 4 கோடியே 50 லட்ச ரூபாய் ஆனது. மற்ற தயாரிப்பாளராக இருந்திருந்தால் இந்த படத்தை 4 கோடி ரூபாயில் முடிக்க முடியாது. வேற எதாவது கதை பண்ணலாம்னு சொல்லி இருப்பேன். இந்த படத்தின் மீது தயாரிப்பாளருக்கு பெரிய நம்பிக்கை இருந்தது." என வெற்றிமாறன் பேசினார்.
Also Read | வாடிவாசல்.. வடசென்னை - 2 எப்போ? வெற்றிமாறன் கொடுத்த சூப்பர் அப்டேட்! FANS HAPPY அண்ணாச்சி