www.garudavega.com

VETRIMAARAN : "இதுக்காக தான் இளையராஜா SIR சீக்ரமா பேசிட்டு போனார்.!" — விடுதலை இசைவிழாவில் வெற்றிமாறன்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி  நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது.

Vetrimaaran On Viduthalai experience with Ilaiyaraaja

Also Read | Vetrimaaran : "நடிகர்களையே தலைவானு கூப்ட வேணாம்.. அப்ப இயக்குநர்களை..".. Viduthalai இசைவிழாவில் வெற்றிமாறன்.!

விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இந்த விடுதலை படத்தில் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். மேலும் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையில் தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விடுதலை முதல் பாகத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Vetrimaaran On Viduthalai experience with Ilaiyaraaja

Images are subject to © copyright to their respective owners.

தற்போது வெளியாகியுள்ள விடுதலை படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மக்கள் படை தலைவராக வாத்தியார் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். பழங்குடியின மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் பாத்திரமாக விஜய் சேதுபதி கதாபாத்திரம் அமைந்துள்ளது. கடைநிலை காவலராக சூரி டிரெய்லரில் தோன்றியுள்ளார். பழங்குடியின போலீஸாக வாத்தியாரை பிடிக்க முனைப்பு காட்டும் போலீசாக சூரி டிரெய்லரில் தோன்றியுள்ளார். மிரட்டலான இந்த டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

Vetrimaaran On Viduthalai experience with Ilaiyaraaja

இதனிடையே இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி, சூரி, இசைஞானி இளையராஜா, எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, தான் 1500 படங்கள் பண்ணிய அனுபவத்தில் வெற்றிமாறன் ஒரு சிறந்த மற்றும் முக்கியமான இயக்குநர் என தெரிவித்ததுடன், இந்த விடுதலை படத்தில் இதுவரை கேட்டிராத புதிய இசையை கேட்கலாம் என்றும் தெரிவித்தார்.

அதன் பிறகு இளையராஜாவுடன் பணியாற்றியது குறித்து பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “ராஜா சாருடன் பணிபுரிந்தது சந்தோஷமாக இருக்கு. அவருடன் கமிட்மெண்ட், டெடிகேஷன் அனைத்தையும் அருகில் இருந்து பார்ப்பதே பெரிய அனுபவம், அவர் இந்த இசைவிழாவுக்கு வந்ததுமே ‘நான் வந்தவுடனே புறப்பட்டுவிடுவேன், எனக்கு ரீ ரெக்கார்டிங் வொர்க் இருக்கு. அதுக்காக நோட்ஸ் எழுதுறேன், என்னை தொந்தரவு பண்ணாதீங்க.’ என்றார். அது நம்ம படத்தின் ரீ ரெக்கார்டிங் பணிதான். இப்பவும் அவர் வொர்க் பண்ண தான் சென்றுள்ளார்.

Vetrimaaran On Viduthalai experience with Ilaiyaraaja

அவரிடம் என்ன ஸ்பெஷல் என்றால், நாம் ஹலோ ஹவ் ஆர் யூ என லெட்டர் எழுதுவது போல, அவர் சாதாரணமாக நோட்ஸ் எழுதுவார். அதன் அர்த்தங்களை நம்மிடம் விவரிக்கவும் செய்வார். அது எதுவுமே புரியாது, ஆனாலும் அந்த அனுபவம் ஸ்பெஷலானது. பாலு மகேந்திரா சாருடன் வொர்க் பண்ணும்போது ராஜா சாரின் அறைக்கு சென்று எதாவது கொடுத்துவிட்டு வருவதற்காக கதவைத் திறந்தால், அவர் வாசிப்பதை கேட்க முடியும். அந்த அளவில் இருந்து இப்ப பக்கத்துல பார்த்து நாம் எடுத்த விஷூவல்ஸை உள்வாங்கி அந்த உணர்வுகளை இசையாக அவர் மாற்றித்தருவதை பார்க்க மிக சந்தோஷமாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Also Read | Ilaiya Nila : ‘இளைய நிலா’ பாடலில் பணிபுரிந்த முக்கிய இசைக்கலைஞர் மரணம்.. ஜேம்ஸ் வசந்தன் உருக்கம்.!

VETRIMAARAN : "இதுக்காக தான் இளையராஜா SIR சீக்ரமா பேசிட்டு போனார்.!" — விடுதலை இசைவிழாவில் வெற்றிமாறன்.! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vetrimaaran On Viduthalai experience with Ilaiyaraaja

People looking for online information on Vetrimaaran, Viduthalai will find this news story useful.