பாலிவுட்டில் கடந்த வருடம் முன்னணி இயக்குநர்களான அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், கரன் ஜோகர், திபாகர் ஜானர்ஜி ஆகியோர் நெட்ஃபிளிக்ஸிற்காக லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற படத்தை இயக்கியிருந்தனர்.
ஒரே கருத்தை வலியுறுத்தும் 4 குறும்படங்களின் சங்கமமான அந்தாலஜி (Anthology) வகையில் உருவாகும் இதனை 4 இயக்குநர்கள் இயக்கியிருந்தனர்.
இதனைப் போல தமிழிலும் முன்னணி இயக்குநர்களான வெற்றிமாறன், கௌதம் வாசுதேவ் மேனன், விக்னேஷ் சிவன், சுதா கொங்காரா உள்ளிட்ட இயக்குநர்கள் இணைந்து ஆந்தாலஜி வைகப்படம் ஒன்றை நெட்ஃபிளிக்ஸிற்காக இயக்கவுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.