புகழ்பெற்ற மூத்த ஸ்டன்ட் இயக்குநரான பர்வேஸ் கான் மறைந்துள்ள செய்தி திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாலிவுட் சினிமாவில் மூத்த ஸ்டன்ட் இயக்குநராக கலக்கி வந்தவர் பர்வேஸ் கான். இவர் அக்ஷய் குமாரின் கில்லாடி, ஷாருக் நடித்த பாசிகர் உள்ளிட்ட படங்களில் தனது சண்டை காட்சிகளால் பிரபலமடைந்தார். மேலும் அண்மையில் இவர் ஸ்டன்ட் இயக்குநராக பணிபுரிந்த அந்தாதூன் திரைப்படத்தின் சண்டைக்காட்சிகள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தனது 55 வயதில் ஸ்டன்ட் இயக்குநர் பர்வேஸ் கான் மறைந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பர்வேஸ் கான் இயற்கை எய்தியுள்ளார். இதை தொடர்ந்து பாலிவுட் பிரபலங்களான ஹன்சல் மேத்தா, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட திரைத்துறையினரும், ரசிகர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Heartfelt condolences to the family !! May he rest in peace!!!🙏🙏 https://t.co/yh00AgRHMe
— manoj bajpayee (@BajpayeeManoj) July 27, 2020