பிரபல நடிகர் சலீம் கவுஸ் மும்பையில் காலமானார்.
தற்காப்புகலை நிபுணரான இவர். சென்னையில் பிறந்து வளர்ந்து கிறிஸ்து சர்ச் பள்ளியிலும் அதற்கு பின்பு, சென்னை மாநிலக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். பின் மும்பையில் குடியேறி வசித்து வந்த இவர், இன்று மும்பையில் உடல்நலக்குறைவால் மரணமைடைந்தார். இவருக்கு வயது 70.
ரெட், சின்னக்கவுண்டர், வேட்டைக்காரன், வெற்றிவிழா, திருடா திருடா, தாழ்வாரம், சரண்ஷ் மற்றும் மந்தன் ஆகிய படங்களில் நடித்ததற்காக நடிகர் சலிம் கௌஸ் இந்திய அளவில் அறியப்பட்டவர்.
சலிம் கவுஸ் 1978 இல் ஸ்வர்க் நரக் திரைப்படத்தின் மூலம் நடிப்பு பயணத்தைத் தொடங்கினார், அதைத் தொடர்ந்து சக்ரா (1981), சரண்ஷ் (1984), மோகன் ஜோஷி ஹசிர் ஹோ (1984) ஆகிய படங்கள் அவரை வட இந்தியாவில் பிரபலப்படுத்தியது.
1989 ஆம் ஆண்டு பிரதாப் போத்தன் இயக்கிய வெற்றி விழா திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்தார். 'தேவர் மகன்' பரதன் இயக்கிய தாழ்வாரம் என்ற கிளாசிக் மலையாளத் திரைப்படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்து கேரளாவில் புகழ் பெற்றார். 1993 இல் மணிரத்னத்தின் திருடா திருடா படத்தில் வில்லனாக நடித்தார், மேலும் மாதுரி தீட்சித் மற்றும் ஷாருக்கானுடன் 1997 ஆம் ஆண்டு கொய்லா திரைப்படத்தில் நடித்தார், பின்னர் 2022ல் அஜித்துடன் ரெட் படத்தில் நெல்பேட்டை சீனி எனும் கதாபாத்திரத்தில் நடித்தார். 2009 இல் வேட்டைக்காரன் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தார்.
சலிம் கௌஸ் தொலைக்காட்சித் தொடர்களிலும் அறியப்பட்ட முகமாக இருந்தார். ஷியாம் பெனகலின் பாரத் ஏக் கோஜ் தொடரில் ராமர், கிருஷ்ணர் மற்றும் திப்பு சுல்தான் வேடங்களில் நடித்துள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8