தெலுங்கு சினிமாவில் பழம்பெரும் நடிகர் கைகாலா சத்தியநாராயணா காலமானார்.
Also Read | மெக்காவுக்கு புனித பயணம் செய்த நடிகை மும்தாஜ்.. கண்ணீர் மல்க இறை வழிபாடு!
இன்று (23.12.2022) காலை ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 87.
இவர் தெலுங்கு சினிமாவில் கதாநாயனகாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
என்டிஆர், ஏஎன்என்ஆர், கிருஷ்ணா, ஷோபன் பாபு, சிரஞ்சீவி, கமல்ஹாசன், பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா, வெங்கடேஷ் போன்ற நடிகர்கள் உடன் நடித்துள்ளார். இவர் தமிழில் பஞ்ச தந்திரம் படத்தில் சின்ன கல்லு பெத்த லாபம் என்ற வசனம் மூலம் பிரபலமானவர்
1996 ஆம் ஆண்டு, தெலுங்கு தேசம் கட்சி சார்பில் முசிலிப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.
இவரது இறுதிச் சடங்குகள் நாளை (டிசம்பர் 24) நடைபெற உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Also Read | மருத்துவமனையில் நடிகர் எஸ்வி சேகர்.. ஆயில் மசாஜால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு.. முழு தகவல்!