கன்னட எழுத்தாளரும், பிரபல நடிகருமான கிரிஷ் கர்னாட் காலமானார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகரும், நாடக ஆசிரியருமான கிரிஷ் கர்னாட் இன்று காலமானார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் கிரிஷ் கர்னாட். பிரபல எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர், திரைப்பட இயக்குநர் என்று பல்வேறு திறமைகள் கொண்டவர் அவர்.

Veteran actor, director and playwright Girish Karnad, aged 81, passes away

கிரிஷ் கர்னாட் தனது குடும்பத்தாருடன் பெங்களூரில் வசித்து வந்தார். 81 வயதான கிரிஷ் கர்னாட் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் இன்று காலை காலமானார். அவருக்கு ரகு கர்னாட் என்கிற மகன் உள்ளார். அவரின் மறைவு செய்தி அறிந்து திரையுலக பிரபலங்களும், எழுத்தாளர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்

பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளை பெற்றவர் கிரிஷ் கர்னாட். மேலும் ஞானபீட விருது, 4 பிலிம்ஃபேர் விருதுகளை பெற்றிருந்தார். யு.ஆர். அனந்தமூர்த்தி எழுதிய நாவல் சமஸ்காராவை தழுவி கன்னட படம் எடுக்கப்பட்டது. அந்த படத்திற்கு திரைக்கதை எழுதி, நடித்து தனது திரையுலக பயணத்தை துவங்கினார் கிரிஷ் கர்னாட்.

ஆர். கே. நாராயணின் புத்தகங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட மால்குடி டேஸ் தொலைக்காட்சி தொடரில் சுவாமியின் தந்தையாக நடித்தார் அவர். வம்ச விருக்ஷா(1971) படம் மூலம் கிரிஷ் கர்னாட் இயக்குநர் அவதாரம் எடுத்தார்

ஷங்கரின் காதலன் படத்தில் பிரபுதேவா, நக்மா காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல வில்லத்தனம் செய்த அப்பாவாக நடித்தவர் கிரிஷ் கர்னாட். சூர்யாவின் 24 தான் அவர் நடித்த கடைசி தமிழ் படமாகும். சல்மான் கானின் டைகர் ஜிந்தா ஹை படத்தில் ரா அதிகாரியாக நடித்திருந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்ட போதிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தவர் அவர்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான நான் அடிமை இல்லை படத்தில் ஸ்ரீதேவிக்கு அப்பாவாக நடித்தவர் கிரிஷ் கர்னாட்.

Veteran actor, director and playwright Girish Karnad, aged 81, passes away

People looking for online information on Girish Karnad will find this news story useful.