பிரபல மலையாள பன்முக நடிகர் டி.பிலிப் மரணம் அடைந்துள்ள தகவல் தென்னிந்திய திரையுலகினரிடையே பெருத்த்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | ‘விக்ரம்’ பார்த்த ‘அவ்வை சண்முகி’ மேக்கப் மேன் மகள்.. இவங்க ஹாலிவுட் நடிகையா.?
மலையாள நடிகர் டி.பிலிப் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது இந்த திடீர் மரணம் அவருடைய ரசிகர்களையும், அவர் மீது அளவுகடந்த மரியாதையையும் அன்பும் வைத்திருக்கும் அடுத்த தலைமுறை திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டேனியல் பிலிப் என்கிற இயற்பெயரைக் கொண்ட பிரபல மலையாள நடிகர் டி.பிலிப். ‘கோட்டயம் குஞ்சச்சன்’, ‘வேட்டன்’, ‘அர்த்தம்’, ‘பழசிராஜா’ ஆகிய திரைப்படங்கள் உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். நடித்த திரைப்படங்கள் குறைவாக இருப்பினும் இவரது நடிப்பும் கதாபாத்திரங்களும் மலையாள திரையுலகில் தவிர்க்க முடியாதவை.
முன்னதாக நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த இவர், அங்கிருந்து சினிமாவுக்கு வந்தவர். இடையில் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து பெரும் வரவேற்பையும் இவர் பெற்றுள்ளார். கடந்த சில நாட்களாகவே வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் அவதியுற்று வந்தார்.
திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 13, 2022) காலமானார். 76 வயதை கடந்த டி.பிலிப்பிற்கு ஒரு மகன் உள்ளார். அவர் வெளிநாட்டில் இருந்தார். அவருடைய மரண தகவலை அடுத்து வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்து இறுதிச்சடங்கு செய்கிறார். இவருக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Also Read | "அப்பவே கமல் படத்துல கிராஸ் ஓவரா.?".. இது பாரதிராஜாவின் மல்டிவெர்ஸ்.. இதான் இப்போ செம Trending