'வெந்து தணிந்தது காடு' படத்தின் விளம்பரப் பேருந்து தமிழகம் முழுவதும் சுற்றி வர உள்ளது.
'வெந்து தணிந்தது காடு’ படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தின் இசை & டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் ரிலீஸை ஒட்டி படத்தயாரிப்பு நிறுவனம் பிரத்யேக பேருந்தை வெந்து தணிந்தது காடு படத்தின் தீம்மை மையமாக வைத்து வடிவமைப்பு செய்து தமிழகம் முழுவதும் சுற்றிவர வைத்துள்ளனர். இந்த பேருந்தை இயக்குனர் கௌதம் மேனன் & தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இருவரும் இணைந்து ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். பேருந்தினுள் வெந்து தணிந்தது காடு படத்திற்காக பயன்படுத்திய பொருட்கள் குறிப்பாக டிராவல் பேக், இசக்கி புரோட்டா, சைக்கிள், வயர் கூடை, தொரத்தி கம்பு, தலையணை ஆகியவை உள்ளன.
'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். சிம்புக்கு ஜோடியாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே நான் கடவுள், அங்காடி தெரு, 2.O, பாபநாசம், சர்கார், இந்தியன்-2, பொன்னியன் செல்வன், விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.
கவிஞர் தாமரை பாடலாசிரியராக பணிபுரிகிறார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிகின்றனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.