'வெந்து தணிந்தது காடு' படத்தின் தெலுங்கு ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read | போடு.! விஜய் & இவருடைய காமெடி காம்போ..?. தளபதி 67-ல் இணைந்த பிரபல நடிகர்.!
'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார்.
சிம்புக்கு ஜோடியாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே நான் கடவுள், அங்காடி தெரு, 2.O, பாபநாசம், சர்கார், இந்தியன்-2, பொன்னியன் செல்வன், விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.
கவிஞர் தாமரை பாடலாசிரியராக பணிபுரிகிறார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிகின்றனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.
'வெந்து தணிந்தது காடு’ படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தின் இசை & டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது.
இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தரான Sri Sravanthi Movies நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் தெலுங்கு பதிப்புக்கு 'Life of Muthu' என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
Glad to get associated with @SravanthiMovies for @SilambarasanTR_ @menongautham’s #TheLifeOfMuthu Telugu version of #VendhuThanindhathuKaadu’s Telungana/ Andhra release…@arrahman @IshariKGanesh @RedGiantMovies_ @Udhaystalin #VTKFromSep15 https://t.co/eynd66rT9R
— Vels Film International (@VelsFilmIntl) September 9, 2022
Also Read | நயன்தாரா - சத்யராஜ் நடித்த 'CONNECT'.. படத்தை பார்த்து மிரண்டு போன விக்னேஷ் சிவன்! வைரல் பதிவு