ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்து சிம்பு நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்ட படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த படம் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இந்த படத்தில் சிம்பு நடிக்கவில்லை எனவும், இந்த படம் புதிய பரிமாணத்தோடு விரைவில் தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், என்னுடைய சகோதரர் எஸ்டிஆருடன் பணியாற்ற முடியாதது வருத்தமாக இருக்கறது. நான் தயாரிப்பாளரின் முடிவை மதிக்கிறேன்.
It’s very unfortunate that I couldn’t work with my brother #str in #maanaadu Everything is time bounded. Considering the amount of emotional and financial pressure that the producer is going through, I have to respect the decision taken by the producer. Thnks for all the love! 🙏🏽
— venkat prabhu (@vp_offl) August 8, 2019