வெங்கட் பிரபு இயக்கும் புதிய பட பூஜை.. யார் யாரெல்லாம் வந்திருக்காங்கனு பாருங்க! வைரல் PHOTOS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெங்கட் பிரபு இயக்கும் புதிய தமிழ் தெலுங்கு படத்தின் பூஜை நடந்தது.

Venkat Prabhu Naga Chaitanya New Movie Shooting Poojai Stills Released

Also Read | Photo: அஜித்குமாரின் AK61 பட ஷூட்டிங்.. வெளியான மஞ்சு வாரியரின் செம்ம சூப்பர் லுக்!

மாநாடு, மன்மத லீலை படங்களைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கவுள்ள அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

மன்மத லீலை படத்திற்கு அடுத்ததாக தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன்  வெங்கட் பிரபு இணையும் இருமொழி படம் குறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளிவந்தது.

இயக்குநர் வெங்கட் பிரபு உடன் நாக சைதன்யா  இணையும் இந்த படம் அவரது 22வது படம் ஆகும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இப்படம் உருவாக உள்ளது.

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் 11 ஆவது திரைப்படம் இதுவாகும். அதே போல, தெலுங்கில் அவர் இயக்கும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Venkat Prabhu Naga Chaitanya New Movie Shooting Poojai Stills Released

தயாரிப்பாளர் ஶ்ரீனிவாச சித்துரி, Srinivasaa Silver Screens சார்பில் தயாரிக்கும் இந்த படத்தினை பவன் குமார் வழங்குகிறார். நாகசைதன்யா தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். மேலும் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஒளிப்பதிவாளர் S.R. கதிர் செயல்பட உள்ளார்.

இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகி உள்ளார்.

Venkat Prabhu Naga Chaitanya New Movie Shooting Poojai Stills Released

இன்று ஜூன் 23 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி உள்ளது.  படத்தின் அலுவல் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் 18 ஆம் தேதி முதல் ஆரம்பம் ஆக உள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Venkat Prabhu Naga Chaitanya New Movie Shooting Poojai Stills Released

தெலுங்கில் இப்பூஜையை போயபத்தி ஶ்ரீனு கிளாப் அடித்து துவக்கி வைத்தார். கேமராவை ராணா ஆன் செய்தார். தமிழில் இயக்குனர் இமயம் பாரதிராஜா கிளாப் அடித்து துவக்கி வைத்தார். நடிகர் சிவகார்த்திகேயன் கேமராவை ஆன் செய்தார்.

Venkat Prabhu Naga Chaitanya New Movie Shooting Poojai Stills Released

இப்படத்தில் இளையராஜா - யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்க உள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்பூஜையில் கலந்து கொண்டார். படத்தின் கதாநாயகன் & கதாநாயகி முறையே நடிகர் நாக சைதன்யா &  கிரித்தி ஷெட்டி பூஜையில் கலந்து கொண்டனர்.

Venkat Prabhu Naga Chaitanya New Movie Shooting Poojai Stills Released

பிரின்ஸ் பட இயக்குனர் அனுதீப், பிரேம்ஜி & சிவகார்த்திகேயனுடன் இப்பூஜைக்கு வந்திருந்து வெங்கட்பிரபு மற்றும் படக்குழுவினரை வாழ்த்தினார்.

Also Read | விக்ரம் படத்தின் 25வது நாள்.. லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட இதுவரை காணாத மாஸ் போஸ்டர்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Venkat Prabhu Naga Chaitanya New Movie Shooting Poojai Stills Released

People looking for online information on Naga chaitanya, Naga Chaitanya New Movie Shooting Poojai Stills, Sivakarthikeyan, Venkat Prabhu will find this news story useful.