இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யாவின் தெலுங்கு-தமிழ் இருமொழித் திரைப்படம் சில மாதங்களுக்கு முன் ஆரம்பமானது.
Also Read | ரஜினியின் பாபா பட ரிலீஸில் அனிருத்..? வைரலாகும் Throwback போஸ்டர்!
NC22 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். நாக சைதன்யா கேரியரில் அதிக பொருட்செலவில் உருவாகும் படமாக இந்த படம் அமைந்துள்ளது.
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரில் ஸ்ரீனிவாசா சித்தூரி இப்படத்தை தயாரிக்கிறார்.
மேஸ்ட்ரோ, இசைஞானி இளையராஜா மற்றும் லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இந்தப் படத்தின் பாடல்களுக்கு இசையமைக்க உள்ளனர். இந்த படத்தை பவன்குமார் வழங்கவுள்ளார். அப்பூரி ரவி வசனம் எழுத, எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தில் நடிகர்கள் அரவிந்த்சாமி, சரத்குமார், தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
ப்ரேம்ஜி அமரன், ப்ரேமி விஷ்வானந்த், சம்பத்ராஜ் மற்றும் வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் இந்தப் படங்களில் இணைந்துள்ளனர்.
இந்த படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடித்து வருகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் அதிரடியான ப்ரீ-லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ப்ரீ-லுக்கில், நாக சைதன்யா போலீஸ் கெட்டப்பில் மாஸ் லுக்கில் உள்ளார். சக அதிகாரிகள் அவரது கோபத்தைத் தடுக்க ஆயுதங்களை பயன்படுத்துவதையும் போஸ்டரில் காணலாம். நாக சைதன்யாவின் இந்த தீவிரமான தோற்றம் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
நாக சைதன்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை நவம்பர் 23 ஆம் தேதி காலை 10:18 மணிக்கு முதல் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | 3D-யில் உருவாகும் கைதி படத்தின் இந்தி ரீமேக்.. அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான மிரட்டலான டீசர்!