சினிமா எப்போதும் ஒரு கலை என்கிற ரீதியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. மிகப் பெரிய கூட்டத்தையோ, அல்லது தனி மனிதனையோ மனதின் ஆழம் வரை சென்று தாக்கவல்லது ஒரு சினிமா. அப்படியான சினிமாக்கள் சமூகத்தில் பல தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளது. ஏன் சில சட்டங்களை இயற்றுமளவுக்கு கூட சினிமாவின் தாக்கம் வலிமையானது. ஆனால், இதை நம்ம நெட்டிசன்ஸ் தற்போது கனக்ட் செய்யும் விதம்தான் இணையத்தை கலக்கி வருகிறது. அதுவேறு ஒன்றுமில்லை, தமிழ் சினிமா காட்சிகளின் தாக்கம் பிரதமர் மோடிக்கும் ஏற்பட்டுவிட்டது என அதிர்ச்சியை கிளப்புகிறார்கள் இணையவாசிகள். ஏன் இப்படி சொல்கிறார்கள் தெரியுமா..?!
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடி, இனி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதற்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை என கூறினார்கள். இந்த நேரத்திலும், நம்ம நெட்டிசன்கள் செம கூலாக, அட இது நம்ம பிச்சைக்காரன் பட சீன் மாதிரியே இருக்கே என chill செய்தார்கள். விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படத்தில், இதே விஷயத்தை ஒரு பிச்சைக்காரர் சொல்வது போல இருக்கும். பிரதமர் மோடியின் ஐடியாவை போலவே இருந்த படத்தின் அக்காட்சியை சுட்டிக்காட்டி fun செய்தார்கள்.
இப்போது கொரோனா வைரஸ் நேரத்தில், பிரதமர் மோடி இன்று ஒரு வேண்டுகோளை விடுத்தார். வரும் ஏப்ரல் 5 ஞாயிற்றுக்கிழை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்கு உள்ளிட்டவற்றை ஏற்ற வேண்டும் என கூறியுள்ளார். அவ்வளவுதான் சும்மா இருப்பார்களா..? நம்ம ஆட்கள். உடனே இது வேலைக்காரன் பட க்ளைமாக்ஸ் போலவே இருக்கிறதே என ஆரம்பித்துவிட்டார்கள். சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தின் க்ளைமாக்ஸிலும் அனைவரும் இப்படி டார்ச் அடித்து ஆதரவை தெரிவிப்பார்கள். இதையடுத்து பிரதமர் மோடியின் ஐடியாக்களை போலவே தமிழ் சினிமாவில் இருக்கும் காட்சிகளை ஒப்பிட்டு இணையத்தை ஜாலி செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த கொரோனா வைரஸ் அச்சம் என்பது அனைவருக்கும் ஒரு கடினமான காலம்தான். அதற்காக பல்வேறு தரப்பினரும் அயராது உழைக்கின்றனர். அதே நேரத்தில் இது போன்ற கடினமான சூழலை கொஞ்சம் லேசாக்கும் வகையில் நமது நெட்டிசன்களின் இது போன்ற ஜாலி பதிவுகள் அனைவரையும் ரசிக்க வைக்கிறது. ஆக மொத்தத்தில் பிரதமர் மோடிக்கு தமிழ் சினிமாவின் தாக்கம் இருக்கிறதோ இல்லையோ, நம்மை கொரோனா வைரஸ் தாக்காமல் இருந்தால் சரிதான். அதற்கான பாதுகாப்போடு இருப்போம் மக்களே.!