777 Charlie Trailer

"என் மருமகளாவும் நடிச்சிருப்பாங்க.. ஜோடியாவும் நடிச்சிருப்பாங்க" - சத்யராஜ் கலகலப்பு பேட்டி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூரின் பே வியூவ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள வீட்ல விஷேசம் படத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ளார். படத்தில் அவரோடு அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி மற்றும் மலையாள நடிகை லலிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

Veetla Vishesham Sathyaraj shares 90s film actress memories exclusive

Also Read | "First இங்க தான் Meet பண்ணோம்".. மனைவி நயன்தாராவுடன் புதுமாப்பிள்ளை விக்னேஷ் சிவன் Press meet.. வீடியோ

இந்தியில் வெளியான பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த படம். தேசிய விருதையும் வென்ற இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இயக்கியும் உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. இந்த படம் வரும் ஜூன் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதனையொட்டி தென்னிந்திய திரையுலகின் மூத்த நடிகர்களான சத்யராஜ் மற்றும் நடிகை ஊர்வசி இருவரும் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பல்வேறு விஷயங்களை இருவருமே பகிர்ந்துகொண்டனர். முன்னதாக ஊர்வசியின் நடிப்புக்கு ஈடுகொடுத்து நடிப்பது குறித்த சவால்கள் பற்றி சத்யராஜ் பேச, ஊர்வசியும் நடிகர் சத்யராஜ் நல்ல நடிகர் என்பதையும் தாண்டி அனைவருக்கும் பிடித்த நல்ல மனிதர் என புகழாரம் சூட்டியிருந்தார்.

Veetla Vishesham Sathyaraj shares 90s film actress memories exclusive

வீட்ல விசேஷம் திரைப்படத்தை பொருத்தவரை சத்யராஜ் அடங்கி போகும் கேரக்டராகவும், ஊர்வசி அதட்டும் கேரக்டராகவும் இருப்பதாக பேசிய சத்யராஜ், தொடர்ந்து தன்னை ரசிகர்கள் வில்லனாக ஏற்றுக்கொண்டதால் எப்படிப்பட்ட கேரக்டரிலும் எப்படிப்பட்ட வசனத்தையும் பேசி இயல்பாக நடிக்க முடிந்தது பற்றி பகிர்ந்துகொண்டார்.

Veetla Vishesham Sathyaraj shares 90s film actress memories exclusive

இதுதொடர்பாக பேசிய அவர், “வேதம் புதிது படத்துல அமலா எனக்கு மருமகளா நடிச்சிருப்பாங்க.. ஜீவா படத்துல எனக்கு ஜோடியா இருப்பாங்க.. ரெண்டு பேரும் ஸ்விம் சூட்ல வந்துபோவோம்..  இதேமாதிரி மிஸ்டர் பாரத் படத்துல அம்பிகா எனக்கு மருமகள், ரஜினி சாருக்கு ஜோடி, அதே நேரத்துல, ரசிகன் ஒரு ரசிகை படத்துல அம்பிகா எனக்கு ஜோடி.. 2 நாள் என்ன மாமானு கூப்டுவாங்க.. 3வது நாள் என்ன மச்சான்னு கூப்டுவாங்க. அதென்னவோ ரசிகர்கள் என்னை ஏத்துக்கிட்டாங்க.. ரஜினி சாருக்கு நான் அப்பாவா நடிக்கும்போது எனக்கு 31 வயசு.. மணி ரத்னம் சாரின் பகல் நிலவு படத்துல எனக்கு பேரன் பேத்தியெல்லாம் கூட இருப்பாங்க” என கலகலப்பாக குறிப்பிட்டுள்ளார்.

Also Read | தனுஷ் நடிக்கும் புதிய படம்.. வெளியான சூப்பர் கேரக்டர் லுக் போஸ்டர்! அடுத்த ட்ரீட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Veetla Vishesham Sathyaraj shares 90s film actress memories exclusive

People looking for online information on Amala, Ambika, Aparna Balamurali, RJ Balaji, Sathyaraj, Urvashi, Veetla Vishesham will find this news story useful.