தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித் குமார்.
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திற்க்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் நடிகர் அஜித் வலிமை படத்தில் நடித்திருந்தார்.
வலிமை படத்திற்கு பிறகு அஜித், துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார். துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
துணிவு படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார்.
இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி சேனலும், ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
துணிவு படத்தை அடுத்து நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரவேற்பை பெற்றது. அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் துணிவு படத்தில் நடித்துள்ள நடிகர்கள் பிரேம் குமார் & வீரா நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். அதில், நடிகர் அஜித்தை முதல்முறையாக சந்தித்த அனுபவம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த நடிகர் வீரா, "முதல் முறையாக அஜித் சாரை அசல் படத்தின் படப்பிடிப்பின் போது பார்த்துள்ளேன். அப்போது அஜித் சாரும் கௌதம் மேனன் சாரும் ஒரு படம் பண்ண வேண்டியது. சூராங்கனி என டைட்டில் அந்த படத்திற்கு. அப்போது கௌதம் மேனன் சார்ட்ட உதவி இயக்குனராக ஒர்க் பண்ணிட்டு இருந்தேன்.
கௌதம் மேனன் சார் அந்த படத்தை கேங்ஸ்டர் படமாக உருவாக்க ஆசைப்பட்டார். அதற்காக வேலை நடந்தது. அப்போ தேதிகள் சரியா அமையாததால் அந்த படம் அடுத்து நடக்கல. அந்த சமயம் ரெஃபரன்ஸ் காட்டுறதுக்கு அஜித் சாரை பார்க்க போயிருக்கேன். என்னை அறிந்தால் படத்தில் நான் ஒர்க் பண்ணல. இருந்தும் என்னை அறிந்தால் படப்பிடிப்பு சமயத்தில் அஜித் சாரை 2-3 முறை சந்தித்துள்ளேன்." என வீரா கூறினார்.