நடிகை வேதிகா, மாலத்தீவு கடலில் நீச்சல் அடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Also Read | சாயிஷா மற்றும் வேதிகா போட்ட டான்ஸ் வீடியோ.. இப்போ செம வைரல்.! - சபாஷ்., சரியான போட்டி 2.0!
இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் மேல் ஃபாலோவர்களை வைத்துள்ள வேதிகா, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்படும் நடிகைகளில் முக்கியமானவர். சமீபத்தில் அரபிக்குத்து பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார், சில மாதங்களுக்கு முன் மாலத்தீவில் இருந்து பிகினி படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலானார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் மாலத்தீவில் இன்பச்சுற்றுலா சென்ற நடிகை வேதிகா, மாலத்தீவின் கடற்கரையில் இருந்து பிகினி புகைப்படங்களை சில நாட்களுக்கு முன் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு தலைப்பாக "ஓ என் ஆன்மாவின் பறவையே.. உடலில் இருந்து பறந்து விடு" என பாரசீக கவிஞர் ரூமியின் கவிதையை எழுதி இருந்தார். அந்த பிகினி புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
இந்நிலையில் மாலத்தீவு கடற்கரையில் Heritance Aarah ஹோட்டல் அமைந்துள்ள கடற்கரையில் நீச்சல் அடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். பிங்க் நிற பிகினி உடையில் வேதிகா இந்த வீடியோவில் தோன்றியுள்ளார்.
வேதிகா, கடந்த மாதம் கொரோனா தொற்றுக்கு உள்ளானார். இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து கடந்த இரண்டு நாட்களாக தனக்கு அதிக காய்ச்சல் இருப்பதாக தெரிவித்தார். தனது ரசிகர்களை முகக்கவசம் அணியுமாறு கேட்டுக் கொண்டார்.
தற்போது கொரோனாவில் இருந்து குணமாகி, மாலத்தீவில் சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள ஹெரிட்டன்ஸ் ஆரா விடுதியில் வேதிகா தங்கியுள்ளார். அங்கிருந்தபடியே புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தி உள்ளிட்ட இந்தியாவில் முன்னணி மொழிகளில் விளம்பர படங்களில் நடித்து பின் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை வேதிகா.
இவர் தமிழில் அர்ஜூன் நடித்த 'மதராஸி' படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து தென்னிந்தியாவில் முக்கிய கவனிக்கத்தக்க நடிகையாக வலம் வருபவர்.
குறிப்பாக சரண் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த 'முனி' படத்தில் லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார், பின் சிம்புவுக்கு ஜோடியாக காளை படத்தில் நடித்தார். அந்த படத்தில் இவரது நடனம் குட்டிப்பிசாசு பாட்டில் இவரது நடனம் பரவலாக பாராட்டப்பட்டது.
அதன் பின் ஏ. ஆர் ரஹ்மான் இசையில் கலா பிரபு இயக்கத்தில் சக்கரக்கட்டி படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்தார். பின் பரதேசி படத்தில் இயக்குனர் பாலா இயக்கத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
'பரதேசி' படத்தில் வேதிகாவின் நடிப்பிற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் கிடைத்தன. பின் வசந்த பாலன் இயக்கத்தில் காவியத்தலைவன் படத்தில் சித்தார்த், பிருதிவிராஜ் உடன் நடித்தார். இந்த படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
Also Read | சூஃபி கவிஞர் ரூமியின் கவிதையுடன் மாலத்தீவு கடற்கரையில் வேதிகா பிகினி போட்டோஷூட்!