தேசிய விருது பெற்ற இயக்குனர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான ‘அநீதி’-யின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ‘கைதி’, ‘மாஸ்டர்’ படங்களில் நடித்த அர்ஜூன்தாஸ் முதன்முறையாக கதையின் நாயகனாக இந்த படத்தில் அறிமுகமாகிறார். ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் மாரியம்மாவாக நடித்த துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். G.V.பிரகாஷ்குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Also Read | "Government- ஏ எனக்கு ஒரு Call-ல".. உதயநிதி முன்பு Love Today பிரதீப் ஜாலி பேச்சு!!
இந்த படத்தில் வனிதா விஜயகுமார்,’நாடோடிகள்’ பரணி,பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, விஜய் டிவி புகழ் ’அறந்தாங்கி’ நிஷா,காளி வெங்கட், சாரா, அர்ஜூன் சிதம்பரம், இயக்குநர் எஸ்.கே. ஜீவா,இயக்குநர் அருண் வைத்தியநாதன்,இயக்குநர் சுப்பிரமணிய சிவா மற்றும் நாட்டிய கலைஞர் பத்மஸ்ரீ சாந்தா தனஞ்செயன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் J.சதீஷ்குமார் மற்றும் அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் இயக்குநர் வசந்த பாலன், கார்த்தி - ராஜூ முருகன் இணையும் ஜப்பான் திரைப்பட தலைப்பு தாம் வைக்க எண்ணியிருந்ததாக தற்போது தகவல் வெளியிட்டுள்ளார். ‘குக்கூ’, ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’ படங்களின் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 25வது படமான ஜப்பான் பட பூஜை அண்மையில் நடந்தது. இதை குறிப்பிட்டு வாழ்த்திய பிரபல இயக்குநர் வசந்த பாலன், அப்படத்தின் தலைப்பில் தாம் படமெடுக்கவிருந்ததாகவும், விஷ்ணு விஷால் அப்பத்தில் நாயகனாக நடிக்கவிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தம்முடைய வலைப்பக்கத்தில், “நடிகர் விஷ்ணு விஷாலுடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு நடக்க வேண்டிய படம்.. பல்வேறு காரணங்களால் தாமதங்கள் ஏற்பட்டு நடக்க வில்லை. இப்போதும் அவ்வப்பொழுது அந்த படத்தை பண்ணலாம் சார் என்று விஷ்ணு அடிக்கடி தொலைபேசியில் உரையாடுவார். அந்த கதைக்கு வைத்த தலைப்பு. தலைப்புகளில் நமக்கு இருக்கும் அதீத காதல் இருக்கே... அது மிக பெரியது.
இதை விட நல்ல தலைப்பை காலம் நம் கைகளில் தரலாம். ஜப்பான் வெல்லட்டும். இயக்குநர் ராஜூ முருகனுக்கும் கார்த்தி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்” என இயக்குநர் வசந்தபாலன் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து நாம் இயக்குநர் வசந்தபாலனை தொடர்பு கொண்டு கேட்டபோது “(மெல்லச்சிரித்தவர்) அதெல்லாம் ஒன்றுமில்லை, நானும் யோசித்தேன். அவர்களும் யோசித்திருக்கிறார்கள். அவ்வளவே.. ஜப்பான் படக்குழுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என தன்னியல்பாக குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பிலான் கட்டா குஸ்தி திரைப்படம் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகவுள்ளது, இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெஷ்மி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | 23 வருசத்துக்கு பின் ராமராஜன் படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா..! கடைசியா இணைந்த படம் இதுதான்!