அப்பாவின் சூப்பர்ஹிட் காமெடி படத்தின் ரீமேக்கில் பாலிவுட் யூங் சென்சேஷன் ஹீரோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட்டின் சூப்பர்ஹிட் திரைப்படமான ‘கூலி நம்பர்.1’ படத்தின் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Varun Dhawan and Sara Ali khan to star in the remake of Coolie No.1

டேவிட் தவான், வஷு பக்னானி கூட்டணியில் கடந்த 1995ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘கூலி நம்பர்.1’ திரைப்படத்தின் ரீமேக்கில் பாலிவுட்டின் தற்போதைய முன்னணி நடிகராக வலம் வரும் வருண் தவான் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக சைஃப் அலிகானின் மகள் சாரா அலிகான் நடிக்கிறார்.  கோவிந்தா, கரீஷ்மா கபூர் நடிப்பில் வெளியான‘கூலி நம்பர்.1’ திரைப்படத்திற்கு பின்,  25 ஆண்டுகள் கழித்து டேவிட் தவான் -வாஷு பக்னானி மீண்டும் இணையவுள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் துவங்கவுள்ளது.

‘மெய்ன் தேரா ஹீரோ’ மற்றும் ‘ஜட்வா 2’ திரைப்படங்களை தொடர்ந்து தனது தந்தை டேவிட் தவானின் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கவிருக்கிறார். ‘கூலி நம்பர்.1’ திரைப்படம் கடந்த 1993ம் ஆண்டு சந்தான பாரதி இயக்கத்தில் பிரபு, சுகன்யா நடிப்பில் வெளியான ‘சின்ன மாப்பிள்ளை’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Varun Dhawan and Sara Ali khan to star in the remake of Coolie No.1

People looking for online information on Coolie No.1, David Dhawan, Sara Ali Khan, Varun Dhawan will find this news story useful.