பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் சந்தோஷமாக இருப்பது என்பது எப்போதாவது அரிதாக நடக்கும் செயல்.
விஜயதசமி, தீபாவளி என பண்டிகை நாட்களில் ஆடிப் பாடி கலகலப்பாக பேசுவது உண்டு. மற்ற நேரங்களில் டாஸ்க், சண்டை, சச்சரவுகள் என பிக்பாஸ் போட்டியாளர்கள் பிசியாக இருப்பார்கள். இதனிடையே தற்போது ஒரு புதிய டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த டாஸ்க்கிற்கு முன்னதாக போட்டியாளர்கள் கொஞ்சம் குதூகலமாக இருந்தனர். அப்போது அனைவரும் நடனம் ஆடினர்.
குறிப்பாக சிபி, தாமரை இருவரும் நடனமாடினார். இதேபோல் வருண் மற்றும் அக்ஷ்ரா இருவரும் நீண்ட நேரம் நடனமாடிய ரகளையான சம்பவமும் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறியது. அக்ஷரா மற்றும் வருண் இருவரும் அண்மை நாட்களாகவே ஒருவருக்கொருவர் சப்போர்ட் செய்துகொள்வதை காணமுடிகிறது.
முன்னதாக பொம்மை டாஸ்கில், அக்ஷராவுக்காக சப்போர்ட் செய்து நிரூப்பிடம் வருண் சண்டையிட்டது அனைவருக்குமே தெரிந்த ஒன்று.இந்நிலையில் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்த இந்த காட்சிகளில் போட்டியாளர்களின் நடனம், பார்வையாளர்களை கவர்ந்து இருக்கிறது.
50வது நாளைத் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்போதாவது ஒருமுறை போட்டியாளர்கள் இப்படி, எல்லாவற்றையும் மறந்து ஆடும் ஒரு செயல் நடக்கிறது எனும்போது அதை ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் ரசித்தபடி செய்கின்றனர் என்பதற்கு அக்ஷரா மற்றும் வருண் ஆடியிருக்கும் இந்த வெறித்தனமான ஆட்டம் உதாரணம் எனலாம்!