நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் கடந்த வாரம் (11.01.2023) முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
Also Read | ஆனந்த் அம்பானியின் நிச்சயதார்த்தம்.. திரண்டு வந்த ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகம்.. வைரல் PHOTOS!
தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி 'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார். நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராமன் எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் எஸ் தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். கே எல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் புகழ் பெற்ற மகப்பேறு மருத்துவரும், பத்மஶ்ரீ விருது வென்ற கேர் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் மஞ்சுளா அனாகனி தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் & இயக்குனர் வம்சியுடன் வாரிசு படத்தின் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "ஒரு ரசிகையாக நடிகர் விஜயை வாரிசு படப்பிடிப்பில் சந்தித்தது சிறந்த தருணம். அவ்வளவு அடக்கமான & தன்மையான மனிதர் அவர்! என்ன ஒரு அழகான படம் வாரிசு! முழு குழுவிற்கும் வாழ்த்துக்கள் - இயக்குனர் வம்சி
, விஜய், ராஷ்மிகா
மற்றும் குழுவினர்!" என டாக்டர் மஞ்சுளா குறிப்பிட்டுள்ளார்.
As a fan of @actorvijay , meeting him on sets of #Varisu was the best moment! Such a humble & down-to-earth person he is! And what a lovely movie Varisu is! Congrats to the whole team - @directorvamshi , Vijay, @iamRashmika and others!#drmanjula #varisu #vijay #thalapathyvijay pic.twitter.com/N0UyTC8E0Q
— Dr Manjula Anagani (@DrManjula_A) January 20, 2023
Also Read | துபாயில் புஷ்பா ஹீரோ அல்லு அர்ஜுன்.. UAE அரசு அளித்த மிகப்பெரிய கௌரவம்!