Naane Varuven M Logo Top
www.garudavega.com

‘பழுவேட்டரையர் - நந்தினி காதல்’.. ‘நந்தினி அழகை போற்றும் வந்தியத்தேவன்’ .. PS1 கேரக்டர் பின்னணி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.

vanthiyathevan Pazhuvettaraiyar nandhini characters Ponniyin Selvan

Also Read | Varalaxmi Sarathkumar : மாறுபட்ட கதாபாத்திரத்தில் வரலஷ்மி நடித்துவரும் புதிய படத்தின் அடுத்த அப்டேட்.!

சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக்  கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

vanthiyathevan Pazhuvettaraiyar nandhini characters Ponniyin Selvan

இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர்.  சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.

vanthiyathevan Pazhuvettaraiyar nandhini characters Ponniyin Selvan

இந்நிலையில் பொன்னியின் செல்வன் நாவலின் பின்னணியில் இருக்கும் ராஜ ராஜ சோழ மாமன்னன் மற்றும் தஞ்சை பெருவுடையார் கோவில் உள்ளிட்ட குறித்த பிஹைண்ட்வுட்ஸின் பிரத்தியேக டாக்குமெண்ட்ரியில் பேசிய முன்னால் காவல் துறை உதவி- ஆணையரும், வரலாற்று ஆய்வாளருமான தஞ்சை C.இராஜமாணிக்கம், M.A பல்வேறு ஆச்சரியமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

vanthiyathevan Pazhuvettaraiyar nandhini characters Ponniyin Selvan

அப்போது நந்தினி கதாபாத்திரம் குறித்து பேசியவர், “பொன்னியின் செல்வன் படித்தோமேயானால் நந்தினி எண்ட்ரி ஆனதுமே படக்கு படக்குனு அடிச்சுக்கும். பழுவேட்டரையர் வயதானவர், நந்தினி இளைய பெண். இவர்களுக்குள் ஒரு காதல்.. இது ஒன்னு.. வந்தியத்தேவன் நந்தினியுடைய அழகை போற்றுகிறான். வந்தியத்தேவன் பூங்குழலி அழகையும் போற்றுவான். நந்தினியின் அழகையும் போற்றுவான். ஆனால் அவனுக்கு குந்தவை மீது மட்டுமே பற்று உண்டு. ” என்று இந்த கதாபாத்திரங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார்.

Also Read | PS1 : “ராஜராஜ சோழனை ஏன் பொன்னியின் செல்வன்னு சொல்லணும்?” - இதான் காரணமா? விளக்கும் ஆய்வாளர்.!

‘பழுவேட்டரையர் - நந்தினி காதல்’.. ‘நந்தினி அழகை போற்றும் வந்தியத்தேவன்’ .. PS1 கேரக்டர் பின்னணி வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vanthiyathevan Pazhuvettaraiyar nandhini characters Ponniyin Selvan

People looking for online information on Ponniyin Selvan, PS1, Raja Raja Chola History, Raja Raja Chozhan history, Tanjore temple informtations will find this news story useful.