தமிழ் சினிமாவில் ரொமான்ஸ், ஆக்ஷன் என எல்லா வகையிலும் பட்டை கிளப்பும் நடிகர் கார்த்தி. இவர் தமது ‘உழவன் ஃபவுண்டேஷன்’ மூலமாக தற்போது முன்னெடுத்துள்ள சமூக பங்களிப்பு தொடர்பான செய்தியும் புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது.
இயக்குநர் மணிரத்னத்தின் உதவிய இயக்குநராக இருந்த நடிகர் கார்த்தி பருத்தி வீரன் படத்தின் மூலம் திரையில் நடிகராக அறிமுகம் ஆனார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் திரைப்படத்தை இயக்கிய கார்த்தி, தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இது தொடர்பான வைரல் பதிவுகளில், தனக்கு ஷூட்டிங் முடிந்து விட்டதாக ஜெயம்ரவி பதிவிட, அதற்கு கார்த்தி, “இளவரசே நீங்கள் அதற்குள் விடைபெற்றுக்கொள்ள முடியாது! நீங்கள் சோழ நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது. இன்னும் 6 நாட்களில் வடக்கில் வேலைகளை முடித்துவிட்டு தென் மண்டலம் வந்தடைவோம். - வந்தியத்தேவன்” என பதிவிட்டுள்ளார்.
இளவரசே @actor_jayamravi நீங்கள் அதற்குள் விடைபெற்றுக்கொள்ள முடியாது! நீங்கள் சோழ நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது 😁
இன்னும் 6 நாட்களில் வடக்கில் வேலைகளை முடித்துவிட்டு தென் மண்டலம் வந்தடைவோம்.
- வந்தியத்தேவன்🐎🐎
#PS #PonniyinSelvan https://t.co/04wAQG9K8G
— Actor Karthi (@Karthi_Offl) August 25, 2021
இதன் மூலம் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மணிரத்னத்தின் பிரமாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி பொன்னியின் செல்வனாகவும், கார்த்தி, வந்தியத் தேவனாகவும் நடிப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் தான் நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேசன் சார்பில், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், தனக்கர்குளம் கிராமத்தில் 90 ஏக்கர் பரப்பளவில் உள்ள வீசாடிக்குளத்தை சீரமைக்கும் பணி, ஆம்பினால் தொழிற்சாலை பங்களிப்புடன் இன்று காலை தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
நடிகர் கார்த்தி கடைக்குட்டி சிங்கம் படத்தில் விவசாயியாகவும், சுல்தான் படத்தில் விவசாயம் செய்தும் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: KGF தயாரிப்புடன் கைகோர்க்கும் ‘சூர்யாவின்’ ஹிட் பட இயக்குநர் ?? சம்பவம் இருக்கு போலயே..