நடிகை வனிதா விஜயகுமாருக்கும் பீட்டர் பால் என்பவருக்கும் கடந்த ஜூன் 27 ஆம் தேதி எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. திருமணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில் பீட்டர் பாலின் முன்னாள் மனைவி பீட்டர் பாலின் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த புகாரில் இருவரும் பிரிந்து 7 வருடங்கள் ஆன நிலையில் பீட்டர் பால் அவரை முறையாக விவகாரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளாராம்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தற்போது வனிதா தனது யூடியூப் சேனல் மூலம் விளக்கமளித்துள்ளார். அதில் பீட்டர் பாலின் முன்னாள் மனைவியின் குற்றச்சாட்டுகள் மீது கேள்வி எழுப்பியுள்ளார். வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.