வனிதா விஜயகுமார் இயக்குநர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமீபத்தில் அறிவித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதா சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கி அதில் குக்கரி மற்றும் ப்யூட்டி டிப்ஸ் வீடியோக்களை பதிவிடத் தொடங்கினார்.
நாளுக்கு நாள் நிறைய சப்ஸ்க்ரைபர்ஸ் அவருக்குக் கிடைக்கத் தொடங்க, வெகு விரைவில் அவரது சேனல் சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக லாக்டவுன் தொடர்ந்து கொண்டே இருந்ததால், தன்னுடைய சேனலில் வீடியோக்கள் பதிவேற்ற முடியாமல் கஷ்டப்பட்ட போது, அவருக்கு உதவ முன்வந்த இயக்குனர் பீட்டர் பாலுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. சில நாட்களில் அந்த நட்பு காதலாக மலர, தற்போது திருமணம் வரை வந்துள்ளது.
தங்களின் ஆழமான காதலை வெளிப்படுத்தும் வண்ணம் சில தினங்களுக்கு முன்பு வனிதா மற்றும் பீட்டர் பால் இருவரும் தங்கள் கைகளில் ஒருவர் மற்றவர் பெயரை டாட்டூ குத்திக்கொண்டனர். இந்த போட்டோவை இன்ஸ்டாவில் வனிதா வெளியிட அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களைக் குவித்தனர்.
இவர்களின் திருமணத்துக்கு வனிதாவின் இரண்டு மகள்களும் சம்மதம் அளித்தனர். இன்று (ஜூன் 27-ம் தேதி) சென்னையிலுள்ள வனிதாவின் வீட்டில் கிறிஸ்துவ முறைப்படி எளிமையாக திருமணம் நடந்தது. வெண்ணிற ஏஞ்சல் உடையில் வனிதா ஜொலிக்க, பீட்டர் கோட்சூட் அணிந்திருந்தார். இருவரும் மோதிரம் மாற்றியபின், முத்தமிட்டனர்.
தற்போது இத்தம்பதியரின் திருமணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சோஷியல் மீடியாவில் மின்னல் வேகத்தில் வைரலாகி வருகின்றது.
இன்றைய நாளை வனிதா தேர்ந்தெடுத்த காரணத்தை முன்பே தெரிவித்திருந்தார். அவரது பெற்றோர் மஞ்சுளா - விஜயகுமார் திருமண நாள் இன்றுதான் என்பதாலும் இந்த நாளில் தன் அம்மாவின் ஆசி இன்று தனக்குக் கிடைக்கும் என்று மனப்பூர்வமாக நம்பி மணவாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறார் வனிதா.
லாக்டவுன் காலகட்டம் என்பதால், இத்திருமண விழாவிற்கு மிக நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டனர். அகிறிஸ்துவ முறைப்படி திருமணத்திற்கு பிறகு வனிதாவை முத்தமிட்டு பீட்டர் பால் மனைவியாக ஏற்றுக் கொண்டார். பின்னர் காதல் மனைவிக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார். இந்த புகைப்படம் உள்ளிட்ட அனைத்து ஃபோட்டோக்களும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது