நடிகை வனிதாவின் தற்போதைய பரபரப்பான பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
இந்தப் பேட்டியில் பேசிய வனிதா விஜயகுமார், “எனக்கும் விஜய் டிவிக்கும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. நேற்று கூட ஒரு நீண்ட தொலைபேசி உரையாடலில் விஜய் டிவியின் தலைமை அதிகாரி ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்களுக்கும் என் மீது எந்த பிரச்சினையும் இல்லை. எனக்கும் அவர்களுக்கும் இடையில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் என்னளவில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி தொடங்கும்போது அவர்கள் கூறிய ஒப்பந்தத்தில் இருந்து நிகழ்ச்சியில் மாற்றங்கள் இருந்ததால் எனக்கு அது பிடிக்கவில்லை.
அந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை, அதில் பங்கு பெற்றவர்கள் அனைவருமே ஏற்கனவே பிரபலமான நட்சத்திரங்கள் தான். அவர்களுக்கென்று திரைப்படங்கள், திரைப்பட வாழ்க்கை, ரசிகர்கள் பட்டாளம் என அனைத்துமே இருக்கிறது; அவை கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை. அதனால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்துதான் ஆகவேண்டும். அந்த மரியாதை தளர்வானதும், எனக்கு அதில் ஈடுபாடு இல்லாததால், விலகுவதே நல்லது என்று கருதி நான் விலகினேன்.” என பேசியுள்ளார்.
அண்மையில் தொடர்ந்து நாம் கேள்விப்பட்டு வரும் சைபர் கிரைம் குற்றங்கள் பற்றி வனிதாவிடம் கேட்டபோது, “உண்மையில் மாதர் சங்கங்கள் எந்தப் பெண்ணுக்கு உதவி செய்தன? எந்தப் பெண்ணின் பிரச்சினைக்கு போராடினார்கள்? என்பது எனக்கு தெரியவில்லை. நான் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை தனியாக சந்தித்திருக்கிறேன். ஒரு பெண் குழந்தையை வைத்துக்கொண்டு நடுரோட்டில் நின்றிருக்கிறேன்.
அப்போது எனக்கு எந்த மாதர் சங்கமும் உதவ வரவில்லை. பலர் தங்களுடைய சைபர் குற்றங்கள் பற்றி கூறுவது என்பது பப்ளிசிட்டிக்காக மட்டும் தான். ஏனென்றால் இங்கு எல்லாமே வணிகம். அந்த வணிகம் தவறில்லை. ஆனால் பரஸ்பர மரியாதை அந்த வணிகத்தில் இருக்க வேண்டும் என்பதே நான் எதிர்பார்க்கிறேன்.
ALSO READ: ‘ஆபாச’ Message அனுப்பிய கல்லூரி மாணவர் கைது!!.. சனம் ஷெட்டியின் உருக்கமான Video!
மற்றபடி பிரபலங்களின் சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து அவர்களின் வீடியோக்களில் போய் அவர்களையே அநாகரிகமாக பேசுகிறார்கள். அவர்களின் திரை வாழ்க்கை குறித்த கேள்விகளை கேட்காமல், தனிப்பட்ட முறையில் அவர்களை தாக்குகிறார்கள். நான் கூட நெற்றியில் குங்குமம் வைத்திருப்பதால், என்னை பார்த்து புருஷன் யார் என்று கேட்கிறார்கள். இப்படியான கருத்துக்களை புறம் தள்ள வேண்டியது தான். வேற என்ன செய்வது?
பலர் அதை சுதந்திரம் என தவறாக புரிந்துக்கொண்டு உரிமை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அது அடுத்தவர்களின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுவது என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. இதையெல்லாம் பார்த்தால் நாம் வாழ முடியாது.!” என்று இதற்கு பதில் அளித்துள்ளார்.