சென்னை, 16, பிப்ரவரி 2022: டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் எபிசோடு விஜய் டிவியிலும் நேரடியாக ஒளிபரப்பானது. இதில் போட்டியாளர்களாக வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, ஷாரிக் ஹாசன், சினேகன், சுருதி, அபினய், தாமரை செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிக்பாஸ் அல்டிமேட்
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் அனைவராலும் சுரேஷ் தாத்தா என அன்போடு அழைக்கப்பட்டு வரும் சுரேஷ் சக்வர்த்தி எலிமினேட் ஆனார். பிக்பாஸ் வீட்டுக்குள் எல்லாவற்றையும் கொளுத்திப் போட்டு கலகலப்பாக வைத்திருக்கிறா என பெயரெடுத்த சுரேஷ் சக்ரவர்த்திக்கும் அனிதாவுக்குமான முரண்பாடுகள் பிக்பாஸ் வீட்டுக்குள் மிகவும் பிரபலமானவைகளாக இருந்தன.
எலிமினேஷன்கள்..
இதேபோல், 2வது வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் எலிமினேட் ஆகப் போகிறார் என்கிற பேச்சுவார்த்தைகள் எழுந்து வந்தன. குறிப்பாக சுஜா, ஜூலி, சினேகன் உள்ளிட்டோர் வெளியே போவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? என தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. ஆனால் கடைசியில் சுஜா வருணி தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து 2வது வாரத்தில் வெளியேறினார். எனினும் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் கேப்டனானதை நினைத்து அவரும், அவரது ரசிகர்களும் பெருமை கொண்டனர். மேலும் பலரது இதயங்களை வென்றுவிட்டு சென்றதாக சுஜாவின் ரசிகர்கள் அவருக்கு புகழாரம் சூட்டினார்கள்.
வனிதா விஜயகுமார்
முன்னதாக காபி பொடி பிரச்சனை, செலிபிரிட்டி பிரஸ் மீட் சண்டை உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து தக் லைஃப் ராணியாக பிக்பாஸ் வீட்டில் ட்ரெண்டாக இருந்து வந்த வனிதா, பிக்பாஸ் வீட்டின் நாட்டாமை பட்டத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ் தன்னை எப்போதும் டார்கெட் செய்வதாக கூறி அழுத வனிதா, ‘நான் யாரையும் ஏமாற்றவில்லை, ஆனால் என்னை மட்டும் ஏன் குறி வைக்கிறார்கள்?’ என கன்ஃபெஷன் அறையில் அழுது புலம்பினார்.
வலுக்கும் டாஸ்க்குகள்..
முன்னதாக திருடன் போலீஸ் டாஸ்க்கில் வெறித்தனமாக ஆடிய வனிதா, அந்த சமயம் தன்னுடைய பெர்சனல் பொருட்கள் திருடப்பட்டதற்காகவும், அவற்றை ஹவுஸ்மேட்ஸ் டேமேஜ் செய்ததற்காகவும்ம் பெருமளவில் கோபப்பட்டு கத்தினார். வனிதாவுக்கும் அபிராமிக்கும், வனிதாவுக்கும் ஜூலிக்கும், வனிதாவுக்கும் ஷாரிக் ஹாசனுக்கும் முளைத்து வெடித்த சண்டைகளை கடந்து வனிதாவுக்கும் பாலாஜி முருகதாஸ்க்கும் இப்போதும் சண்டை அமோகமாக களைகட்டியுள்ளது.
வெடிக்கும் வனிதா - பாலாஜி சண்டை..
ஆம், இது தொடர்பாக வெளியாகியுள்ள இன்றைய ப்ரோமோக்களில், 80களின் வாழ்வை, நினைவை பிரதிபலிக்கும் பள்ளி மாணவர்களாக ஹவுஸ்மேட்ஸ் வாழ, ஒவ்வொருவரும் சில சினிமா கேரக்டரையும் நினைவூட்டினர். அப்படித்தான் வனிதா, கேரக்டரை புரிந்துகொண்டு நடிக்கச் சொல்லி பாலாஜிக்கு வலியுறுத்த, அதற்கு பாலாஜியோ, ‘நான் பண்ணத நீங்க பாத்தீங்களா? ஏன் எல்லாரையும் டிஸ்கரேஜ் பண்றீங்க? நீங்க நான் பண்ணது என்னனு தெரியலனா பேசவே கூடாது. கேப்டன் ஆகும் போது நீங்க என்ன சொன்னீங்க? யார் என்ன டாஸ்க் பண்ணாலும், நான் நடுவுல வந்து தலையிட மாட்டேன்னு சொன்னீங்கள்ல?’ என்று கடுமையாக சாடினார்.
Also Read: "Congrats.. எப்டி Divorce பண்ணீங்க?".. காமெடி & ரொமான்ஸ் ததும்பும் ஹே சினாமிகா டிரைலர்
உங்களுக்கு ஏன் நம்பிக்கை வரணும்?
இதற்கு வனிதாவும், ‘நான் டிஸ்கரேஜ் பண்ணல பாலா.. எல்லாரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்றால் நீங்க பண்ற கேரக்டர் என்னனு தெரிய வேண்டும். அதற்கு நீங்கள் முதலில் கேரக்டரை புரிந்துகொண்டு நடிக்க வேண்டும்’ என்று வாதம் செய்தார். மேலும் பாலாஜி முருகதாஸ் பேசும்போது, ‘என் நடிப்பு மேல் உங்களுக்கு ஏன் நம்பிக்கை வரணும்? நடிக்க தான் வந்துருக்கீங்க.. கரெக்டா நடிங்கனு சொல்றது டிஸ்கரேஜ் பண்றது மாதிரி இல்லையா?’ என கேட்டார்.
உனக்கு மட்டும் இல்லை..
இதற்கு வனிதா, ‘டிஸ்கரேஜ் பண்ணுவதாக நினைப்பதெல்லாம் உன் பிரச்சனை.. நடிக்கும் போது ஒத்துழைப்பு கிடைக்க வேண்டும். ஆனால் நீ கேரக்டரை உள்வாங்கி நடிக்காததால், அது முடியாமல் போகிறது. உனக்கு மட்டும் இல்லை, நான் சொல்வது எல்லாருக்கும் பொதுவானதுதான். அதை முதலில் புரிஞ்சுக்க’ என பேசப்பேச பாலாஜி முருகதாஸ் அங்கிருந்து நடையை கட்டிவிட்டார்.
24 மணிநேரமும்..
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்பை போல் அல்லாமல் இந்த ஓடிடி நிகழ்ச்சி, எந்தவித சென்சார் கட் மற்றும் பெரிய அளவிலான காட்சிகள் கட் பண்ணப்படுவது உள்ளிட்ட விஷயங்கள் இல்லாமல் நடக்கிறது. பெரும்பாலும் ஒரு நாள் முழுவதும் நடக்கக் கூடிய விஷயங்களை 24 மணி நேரமும் நேரலையில் காட்டப்பட்டு வருகிறது. அதே போல் இந்த நிகழ்ச்சியின் 24 மணிநேரமும் நேரலை காட்சி ஓடிக் கொண்டிருப்பது போல, மொத்த நிகழ்ச்சியும் ஒரு மணி நேரமாக இரவு 9 மணிக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தினமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.