வலிமை பட வில்லன் நடிகர் கார்த்திகேயா கும்மகோண்டா தமது நீண்ட நாள் காதலியான லோஹிதா ரெட்டியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பிற்கு காத்துக்கொண்டு இருக்கும் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடிக்கும் பிரபல படம் 'வலிமை'. போனி கபூர் தயாரிப்பில், இயக்குநர் எச்.வினோத் இயக்கும் இந்த திரைப்படத்தில் இளம் நடிகரான கார்த்திகேயா கும்மகோண்டாவில்லனாக வலம் வந்துள்ளார்.
முன்னதாக, ராஜா விக்ரமார்கா ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் சினிமா பாணியில், தனது வருங்கால மனைவியை திருமணத்திற்கு முன், முழங்காலிட்டு தனது அழகான காதலை வெளிப்படுத்தினார்நடிகர் கார்த்திகேயா.
இந்நிலையில் கார்த்திகேயா தனது பால்ய தோழியான லோஹிதா ரெட்டியை காதலித்து வந்ததை அடுத்து, நவம்பர் 21-ஆம் தேதி, காலை, பிரமாண்டமான முறையில் நடந்த திருமணத்தில் திருமணம் செய்து கொண்டார்.
நெருங்கிய விருந்தினர்கள், பிரபலங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இந்த திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த அழகான ஜோடி இறுதியாக தங்கள் புதிய பயணத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் மற்றும் ஆசீர்வாதங்களுடன் தொடங்கியுள்ளனர். இந்த திருமணத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.