சென்னை: வலிமை படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆகும் நேரம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், அதன் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பொங்கல் ரிலீஸ்
வலிமை' படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளனர். 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது.
நல்ல வரவேற்பு
மோஷன் போஸ்டரை தொடர்ந்து "நாங்க வேற மாரி" பாடல் தற்போது 38 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இரண்டாவது சிங்கிள் அம்மா பாடல் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. வலிமை படத்தின் "விசில் தீம்" இசையும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
திரை பிரபலங்களை குறிவைக்கும் துபாய்.. மோகன்லால் முதல் பார்த்திபன் வரை "கோல்டன் விசா" ஏன்?
அமோக விற்பனை
இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், வலிமை படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆகும் நேரம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ள சமயத்தில், அதன் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கலில் உள்ள (Umaa Rajendra Cinemas) திரையரங்கில், 1 டிக்கெட் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட்டை ரசிகர்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.