சென்னை: வலிமை படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் சமீபத்தில் போட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.
வலிமை படத்தின் சண்டை பயிற்சி இயக்குனர் திலீப் சுப்பராயன் பெயரில் டிவிட்டரில் போலிக்கணக்கு துவங்கப்பட்டு சினிமா சம்பந்தப்பட்ட செய்திகள் பல அதில் இடம்பெற்று வந்துள்ளன. பார்ப்பதற்கு மாஸ்டர் திலீப் சுப்பராயனின் ஒரிஜினல் டிவிட்டர் கணக்கு போலவே இந்த கணக்கும் முகம் தெரியாத நபரால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. இதனை அறிந்த திலீப் சுப்பராயன் தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து டிவீட் செய்து விளக்கமளித்துள்ளார். வலிமை படத்தின் சென்சார் பற்றி, படத்தின் முதல் பாதி, இரண்டாம் பாதி குறித்து இயக்குனர் வினோத் கூறிய தகவல்கள் எல்லாம் அந்த போலி கணக்கில் டிவீட் செய்யப்பட்டுள்ளன
வலிமை படம் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 13 அன்று பொங்கலுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதனை முன்னிட்டு 'வலிமை' படம் சென்சாரகியது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் இந்த படத்தின் முன்னோட்டம் வெளியானது.
மாணவி லாவண்யா வழக்கு : தமிழக அரசு மீது குற்றம் சுமத்தி பரபர அறிக்கை விட்ட கமல்ஹாசன்!
கொரோனா பரவல் காரணமாக தமிழகம், டெல்லி, மகாராஸ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ள திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதியில் இருந்து 50% பார்வையாளர்களாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஞாயிறு மற்றும் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனவரி மாதம் 1 முதல் தற்போது வரை வரை தமிழக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு (பார்வையாளர்கள்) மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் மூன்றாவது அலை ஒமிக்ரான் பரவலும் அதிகரித்துள்ளது, இந்த காரணிகள் படத்தின் வசூலை பாதிக்கலாம். இதன் காரணமாக ரிலீஸ் தேதி (13.01.2022) இருந்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
BREAKING: ப்ளாக் பஸ்டர் ஆன அஜித் படத்தின் தெலுங்கு ரீமேக்! வெளிவந்த வேற மாரியான மாஸ் அப்டேட்!
இது குறித்து வலிமை தயாரிப்பாளர் போனி கபூர் டிவிட்ட்ரில் " பார்வையாளர்களும் ரசிகர்களும் எப்பொழுதும் எங்களின் மகிழ்ச்சியின் ஆதாரமாக இருந்துள்ளனர். கடினமான காலங்களில் அவர்களின் நிபந்தனையற்ற ஆதரவும் அன்பும், இன்னல்களை எதிர்கொள்வதற்கும், எங்களின் கனவுத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கும் முக்கியமான நம்பிக்கைகளை நமக்குள் விதைத்தது. சினிமா அரங்குகளில் அவர்களை மகிழ்ச்சியாகவும் பார்க்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தருணத்திலும் நாங்கள் விரும்பியது. அதே நேரத்தில், எங்கள் பார்வையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு எப்போதும் எங்கள் எல்லா முடிவுகளிலும் முன்னணியில் உள்ளது. உலகம் முழுவதும் கோவிட் தொற்றுகள் அதிகரித்து வருவதாலும், அரசின் விதிமுறைகளுக்கு இணங்குவதாலும், எங்கள் திரைப்படமான 'வலிமை' படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். தடுப்பூசி போட்டு, முகமூடி அணிந்து பாதுகாப்பாக இருங்கள். மிக விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்!" என கூறியிருந்தார்.