www.garudavega.com

சூடு பிடித்த வலிமை பட வியாபாரம்! செங்கல்பட்டு ஏரியாவை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வலிமை' படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Valimai Movie Chengalpattu Area Rights Bagged by This Distributor

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், தல அஜித் (Ajith Kumar) நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. NKP படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது. வலிமை படத்தின் படப்பிடிப்பு  (01.09.2021) அன்று  நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Valimai Movie Chengalpattu Area Rights Bagged by This Distributor

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ரஷ்யா சென்றிருந்தது. அதில் தல அஜித் (Ajith Kumar) பங்கேற்கும் மிகப்பெரிய பைக் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளன்ர். 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் (Motion Poster) 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது. மோஷன் போஸ்டரைத்தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் தற்போது 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

Valimai Movie Chengalpattu Area Rights Bagged by This Distributor

படம் பற்றிய அடுத்த அப்டேட்டான  Mother Song சிங்கிள்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வலிமை படத்திற்காக திரையரங்குகளை எடுக்கும் பணிகள் படக்குழு மூலம் முழுவீச்சில் துவங்கியுள்ளன. இதுவரை வெளியீட்டு தேதி அறிவிக்கபடாத நிலையிலேயே 'வலிமை' படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவுகிறது. குறிப்பாக தென் மாவ்ட்ட பகுதிகளில் உள்ள தியேட்டர்கள் தற்போதே வலிமை படத்தை திரையிடும் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது.  வலிமை படத்தின் கோயமுத்தூர் உரிமையை கற்பகம் தியேட்டர் காம்ப்ளக்ஸ் உரிமையாளரும், மாநாடு படத்தின் தமிழக வினியோகஸ்தருமான  SSI  Productions சுப்பையா சண்முகம் மிகப்பெரிய விலைக்கு கைப்பற்றியுள்ளார். மேலும் வலிமை படத்தின் செங்கல்ப்பட்டு ஏரியா உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆக இருப்பதாக கோபுரம் பிலிம்சால் அறிவிக்கப்பட்டது. இந்த செங்கல்ப்பட்டு ஏரியா தான் தமிழகத்தில் மிகப்பெரிய ஏரியாவாகும். 

Valimai Movie Chengalpattu Area Rights Bagged by This Distributor

இந்நிலையில் வலிமை படத்தின் செங்கல்பட்டு உரிமையை இடிமுழக்கம், வேலன் படங்களின் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தனது ஸ்கைமேன் நிறுவனத்தின் மூலம் மிகப்பெரிய சாதனை விலைக்கு கைப்பற்றியுள்ளார். இதுகுறித்து முபாரக் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Valimai Movie Chengalpattu Area Rights Bagged by This Distributor

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Valimai Movie Chengalpattu Area Rights Bagged by This Distributor

People looking for online information on Ajith Kumar, AK, H Vinoth, Thala, Valimai will find this news story useful.