www.garudavega.com

விஸ்வாசம், மாஸ்டர் பட சாதனையை ரிலீஸ்க்கு முன்பே முறியடித்த வலிமை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Chennai : விஸ்வாசம், மாஸ்டர் பட சாதனையை ரிலீஸ்க்கு முன்பே வலிமை படம் முறியடித்துள்ளது.

Valimai Beat Master and Viswasam in Japan Theatre List

வலிமை படத்தின் டிரெய்லர்

வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  படத்தின் ரிலீஸ் தேதியாக 2022 ஜனவரி 13 என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். வலிமை படத்தின் டிரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சினிமாத் துறையில் உள்ள பலர், குறிப்பாக தமிழ் சினிமா அல்லாத தெலுங்கு இந்தி சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் வலிமை படத்தின் டிரெய்லரை பாராட்டி வருகின்றனர். வலிமை படத்தின் டிரெய்லரில் மிக முக்கிய அம்சமாக பைக் சேஸிங் காட்சிகளும் சண்டைக்காட்சிகளும் அமைந்துள்ளது. இந்த சேஸிங் காட்சிகளுடன் வலிமை படத்தின் எடிட்டிங், ஒளிப்பதிவு, பிண்ணனி இசை, உடையமைப்பு, கலை இயக்கமும் பாராட்டை பெற்று வருகிறது. 

அஜித்குமார் நடிக்கும் 'வலிமை' பட பிரான்ஸ் தியேட்டர் உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Valimai Beat Master and Viswasam in Japan Theatre List

CBFC சென்சாரில் U/A

இந்த படத்திற்கு கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 'வலிமை' படம் சென்சாரகி உள்ளது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம். 

Valimai Beat Master and Viswasam in Japan Theatre List

Valimai Beat Master and Viswasam in Japan Theatre List

ஜப்பான் தியேட்டர் ரிலீஸ்

இந்நிலையில் வலிமை படத்தின் ஜப்பான் தியேட்டர் ரிலீஸ் உரிமையை ஸ்பேஸ் பாக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் வலிமை படம் ரிலீசுக்கு முன்பே ஜப்பானில் விஸ்வாசம், மாஸ்டர் பட சாதனையை முறியடித்துள்ளது. 2021 பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படம் 7 காட்சிகள் முதல் வாரத்தில் திரையிடப்பட்டன. 2019 பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் படம் 5 காட்சிகள் முதல் வாரத்தில் திரையிடப்பட்டன.  இந்நிலையில் வலிமை படம் ஜப்பானில் முதல் வாரத்தில் 8 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது. மாஸ்டர், விஸ்வாசம் படங்களின் ஜப்பான் தியேட்டர் உரிமையை ஸ்பேஸ் பாக்ஸ் நிறுவனம் தான் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Valimai Beat Master and Viswasam in Japan Theatre List

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Valimai Beat Master and Viswasam in Japan Theatre List

People looking for online information on Ajith Fans Japan, Ajith Kumar, Japan Valimai, Master, Valimai, Valimai Beat Master, Valimai Beat Viswasam, Valimai Japan, Valimai Tickets, Viswasam will find this news story useful.