சென்னை: வலிமை படத்தில் நடிகர் அஜித்தின் தந்தையாக பழம்பெரும் நடிகர் நடித்துள்ளார்.
வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. வலிமை படத்தின் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் ரிலீஸ் உரிமையை கோபிசந்த் இனாமுரியின் IVY புரொடக்சன்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
இதனை டிவிட்டரில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரும், ஜி ஸ்டூடியோசும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஏற்கனவே வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
வலிமை படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 750க்கும் மேற்ப்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக வலிமை படத்தின் வினியோகஸ்தர் கோபிசந்த் இனாமுரியின் IVY புரொடக்சன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
வலிமை படத்தின் கேரள தியேட்டர் ரிலீஸ் உரிமையை புஷ்பா, மாநாடு படங்களை ரிலீஸ் செய்த E4 Entertainment நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வலிமை படம் 200க்கும் மேற்ப்பட்ட திரைகளில் கேரளாவில் வெளியாகிறது, முதல் ஷோ காலை 5 மணியில் இருந்து பாலக்காடு, திருவனந்தபுரத்தில் திரையிடப்படுகிறது, மற்ற ஊர்களில் காலை 6 மணியில் இருந்து திரையிடப்பட உள்ளது.
வலிமை படம் BOOK MY SHOW தளத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களால் விரும்பப்பட்டுள்ளது. இதுவரை இந்திய திரைப்படங்களில் அதிக ரசிகர்கள் பார்க்க ஆர்வம் காட்டும் படமாக வலிமை படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் வலிமை படத்தில் நடிகர் அஜித்தின் அப்பாவாக மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர் தோன்றியுள்ளார். சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோவில் ஜெய்சங்கரின் புகைப்படம் பின்னணியில் உள்ளது. இறந்து போன அப்பா கதாபாத்திரத்தில் ஜெய்சங்கர் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.
நடிகர் ஜெய்சங்கரின் மகன் கண் மருத்துவர் விஜய் சங்கர் நடிகர் அஜித்திற்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார்.
நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.