தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி 'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.
Also Read | EXCLUSIVE: லிங்குசாமி தயாரிப்பில் கமல்ஹாசன்?.. உத்தமவில்லனுக்காக மீண்டும் ஒரு புதிய படம்!
நடிகர்கள் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறார்கள்.
தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார். மேலும், இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான ராது இன்ஃபோடெயின்மெண்ட் வி.எஸ். பாலமுரளி கைப்பற்றி உள்ளார். சேலம் ஏரியாவை வினியோகஸ்தர் செந்தில் கைப்பற்றியுள்ளார். மதுரை உரிமத்தை Five Star Flims நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
மேலும், வாரிசு படத்தின் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 24.12.2022-ல் நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குனர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். வாரிசு படத்தின் அனைத்து 5 பாடல்களும் வெளியாகியுள்ளன.
நேற்று வாரிசு திரைப்படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் ஆகி 'யு' சான்றிதழ் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை சினிமா விமர்சகர் பிஸ்மி அளித்துள்ளார். வாரிசு & துணிவு படம் குறித்தும் பல கேள்விகளுக்கு பிஸ்மி பதில் அளித்துள்ளார். வாரிசு படத்தின் தெலுங்கு உரிமம் குறித்து பேசிய பிஸ்மி, "வாரிசு படத்தின் தெலுங்கு உரிமத்தை தில் ராஜூ தான் வைத்துள்ளார். அவரே அந்த படத்தை ரிலீஸ் செய்கிறார். ஆந்திராவில் மட்டும் வாரிசு படம் 100 கோடி ரூபாயை வசூலிக்கும் என தில் ராஜூ நினைக்கிறார். இதன்மூலம் 50 கோடி ரூபாய் ஷேர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார். இது எப்படி சாத்தியம் என்றால் அதற்கு ஒரு லாஜிக் சொல்கிறார். கன்னட திரைப்படம் கேஜிஎப், காநதாரா ஆந்திராவில் நல்ல வசூலை பெற்றுள்ளது. பொன்னியின் செல்வன் கர்நாடக மாநிலத்தில் நல்ல வசூலை பெற்றுள்ளது. இதேபோல் வாரிசு ஆந்திராவில் 100 கோடி வசூலை பெறும் என தில் ராஜூ கருதுகிறார்." என பிஸ்மி பேசியுள்ளார்.
Also Read | 50 MILLION பார்வையாளர்களை நோக்கி துணிவு டிரெய்லர்.. எடிட்டர் விஜய் பகிர்ந்த வைரல் TIMELINE PHOTO!