ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் பிக்பாஸ் பிரபலம் - விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழக அரசு சால விதிகளை கடுமையாக செயல்படுத்தி வருகிறது. மேலும் சாலை விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபாரதத் தொகையை தற்போது அதிகரித்துள்ளது.

Vaiyapuri and Chams gives awareness notice to people

மேலும் ஹெல்மெட் அணியாமல் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபாரம் ரூ. 100லிருந்து ரூ.1000-மாக அதிகிரத்து அறிவிப்பு வெளியானது. மேலும் இருசக்கர வாகனத்தில் பின்னாள் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று மீறினால் அவர்களுக்கும் அபாரதத் தொகை பொருந்தும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை தமிழக காவல் துறை பல்வேறு நிகழச்சிகளின் மூலம் மக்களுக்கு உணர்த்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரபல நடிகர்கள் வையாபுரியும் சாம்ஸும் ஹெல்மெட் அணியும் அவசியத்தை உணர்த்தும் வகையில் சென்னை, விருகம்பாக்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் அளித்தனர்.

Vaiyapuri and Chams gives awareness notice to people

People looking for online information on Chams, Helmet, Vaiyapuri will find this news story useful.