தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு.
Also Read | இந்தியில் உருவாகும் சூப்பர் ஹிட் அடித்த 'LOVE TODAY'.. செம்ம அறிவிப்பு! முழு விவரம்
இவரது காமெடிகள் காலங்கள் கடந்தும் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுகிறது. தற்போது நடிகர் வடிவேலு, மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அண்மையில் சுராஜ் இயக்கத்தில் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தில் 'வைகைப்புயல்' வடிவேலு நாயகனாக நடித்திருந்தார். 'டாக்டர்' ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ் காந்த், லொள்ளு சபா சேஷு,இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் நடிகை சிவாங்கி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் வடிவேலுவுடன் நடித்திருந்தனர்.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தினை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்திலும் வடிவேலு நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயரும் மாமன்னன் என கூறப்படுகிறது. மாமன்னன் படத்தில் வடிவேலு அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பி.வாசு இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் சந்திரமுகி 2 படத்திலும் வடிவேலு, ராகவா லாரன்ஸ் மற்றும் ராதிகாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் வடிவேலு மகா சிவராத்திரியை முன்னிட்டு தமது குலதெய்வம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். தாயார் இறந்து வருடம் திரும்பாதமையால் கோயிலுக்கு வெளியில் நின்று சாமி தரிசனம் செய்துள்ளார். சாமி தரிசனம் முடிந்த பிறகு அங்கு கூடியிருந்த மக்களிடம் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். பரமக்குடி அருகே உள்ள காட்டு பரமக்குடியில் உள்ள அருள்மிகு திருவேட்டை உடைய ஐயனார் சுவாமி திருக்கோயில் தான் வடிவேலுவின் குலதெய்வம் கோயில் என்று கூறப்படுகிறது. இந்த கோயிலுக்கு தான் வடிவேலு வந்து சாமி தரிசனம் செய்துள்ளார்.
Also Read | அண்ணாமலையார் கோவிலுக்கு குட்டி யானை கேட்டாரா மயில்சாமி.? நடிகர் ஜெயராம் சொன்ன தகவல்..!