www.garudavega.com

NAAI SEKAR RETURNS : "பூமரு பூமரு அங்கிளும் வருவாரு".. வடிவேலு குரலில் பட்டையை கிளப்பும் 2வது SINGLE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வைகைப்புயல் வடிவேலு நடிக்கும் "நாய் சேகர் ரிட்டன்ஸ்" படத்தின் இரண்டாவது சிங்கிள் தற்போது வெளியாகி உள்ளது.

vadivelu naai sekar returns second single released

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இதில் 'வைகைப்புயல்' வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். 'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு, 'குக் வித் கோமாளி' புகழ் நடிகை சிவாங்கி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தை லைகா புரொடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சென்னை மற்றும் மைசூரில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது. வடிவேலுவுடன் பல நாய்களும் பிரதான வேடத்தில் நடித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதே போல நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் BTS புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கூட அவ்வபோது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தன. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ரிலீஸ் தேதியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

vadivelu naai sekar returns second single released

அதன் படி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் டிசம்பர் மாதம் 09 ஆம் தேதியன்று வெளியாகும் என்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது. முன்னதாக, சந்தோஷ் நாராயணன் இசையில் வடிவேலு பாடி இருந்த 'அப்பத்தா' தற்போது வரை ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது. மிகவும் வித்தியாசமாக, பாடலின் இசை மற்றும் வரிகள் இருந்ததால் ரசிகர்களின் கவனத்தையும் அதிகம் ஈர்த்திருந்தது.

vadivelu naai sekar returns second single released

அந்த வகையில், தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் இரண்டாவது சிங்கிளும் வெளியாகி உள்ளது. "பணக்காரன்" என்ற இந்த பாடலை வைகைப் புயல் வடிவேலு மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பாடி உள்ளனர். மேலும், பாடல் வரிகளை விவேக் எழுதி உள்ளார். அப்பத்தா மற்றும் பணக்காரன் ஆகிய இரண்டு பாடல்களும் வடிவேலு குரலில் உருவாகி உள்ள நிலையில், வித்தியாசமான வகையில் இந்த பாடல் அமைந்துள்ளதால், ரசிகர்கள் அதிகம் வைரல் ஆக்கியும் வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vadivelu naai sekar returns second single released

People looking for online information on Lyca Productions, Naai Sekar Returns, Santhosh Narayanan, Suraaj, Vadivelu will find this news story useful.